கோவை தான் டார்கெட்..கரூரை கண்டுக்கவில்லையா செந்தில் பாலாஜி? திமுகவினரை அதிமுகவுக்கு தூக்கிய எம்ஆர்வி
கரூர்: அமைச்சர் பொறுப்பில் இல்லாவிட்டாலும் கோவை மண்டல பொறுப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த முறை கொங்கு மண்டலத்தை தட்டித் தூக்க வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். ஆனால் கோவையில் காட்டும் ஆர்வத்தை கரூரில் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தூக்கி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழக அளவில் பல கட்சிகள் இருந்தாலும் ஆண்டதும் ஆள்வதும் ஆளப்போவதும் இரண்டே இரண்டு திராவிட கட்சிகள் தான். அது திமுக அதிமுக மட்டும் தான். 60 ஆண்டு கால தமிழக அரசியல் அதைத்தான் சொல்லி இருக்கிறது. மாவட்ட அளவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு முக்கிய 'தலை' மாவட்ட அரசியலிலும், மாநில அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும். அதிமுகவிலும் அப்படித்தான் இருக்கிறது.

தமிழக அரசியல்
திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், ஜெயக்குமார், என அவரவர் தங்கள் மாவட்டங்களில் அதிமுகவின் தனிப்பெரும் செல்வாக்கோடு வலம் வருகிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் முழுமையாக கோலோச்சுவார்கள். ஒரு சில மாவட்டங்களில் அதிமுகவினர் வலுவாக இருப்பார்கள். சில மாவட்டங்களில் மட்டும்தான் நேரடி போட்டி இருக்கும். உதாரணத்திற்கு மதுரையில் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா என ஒரு டீம் இருந்தால், திமுகவில் பி.டி.ஆர். மூர்த்தி என எதிர் டீம் வலுவாக இருக்கும்.
செந்தில் பாலாஜி
அப்படித்தான் கரூரிலும். கடந்த காலத்தில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவினார். உடனடியாக அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியும் சில நாட்களில் மாவட்ட செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் ஒன்றாக அரசியல் செய்த செந்தில் பாலாஜியும் விஜயபாஸ்கரும் எதிர் எதிர் துருவங்களாக மாறினர். கரூர் என்றாலே அரசியல் அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காத வகையில் இருவரும் பார்த்துக் கொண்டனர்.
எம்ஆர் விஜயபாஸ்கர்
செந்தில் பாலாஜி அதிரடி அரசியல் என்றால், விஜயபாஸ்கர் நிதானமான, கவனமான அரசியல் செய்பவர். இதனால் இரு தரப்பிற்குமே ஆதரவாளர் வட்டம் அதிகம். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். தமிழ்நாடு முழுவதுமே அந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விஜயபாஸ்கர் தரப்பு சுமத்தியது. திமுக தலைமையின் கவனத்தைப் பெற்ற செந்தில் பாலாஜி கோவை மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக நகர்வு
அதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக வெற்றி வியூகம் அமைத்தது செந்தில் பாலாஜி. இதற்கிடையே வழக்கு காரணமாகச் சிறை சென்ற நிலையில் பின்னர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியும் போய்விட்டது. தற்போது எம்எல்ஏவாக இருந்தாலும் திமுக கோவை மண்டலப் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இந்நிலையில், அவரது கவனம் முழுக்கக் கோவையில் தான் இருக்கிறது. கரூரில் இல்லை என்ற அதிருப்தியை அவரது ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திமுக நிர்வாகிகள்
தற்போது கரூரில் திமுக முப்பெரும் விழா நடக்க இருக்கும் நிலையில் அதற்காக மட்டும்தான் செந்தில் பாலாஜி கரூரில் முகாமிட்டிருக்கிறார். மற்றபடி கோவை, சென்னை எனத்தான் அரசியல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது தம்பியின் ஆதிக்கம் மறைமுகமாக திமுகவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதை தெரிந்துகொண்ட விஜயபாஸ்கர் தரப்பு திமுக நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்கத் தொடங்கியுள்ளது.
திமுக அதிர்ச்சி
அந்த வகையில் தான் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புலியூர் பேரூராட்சி திமுக 11வது வார்டு பிரதிநிதி எஸ்.மனோகரன், 5வது வார்டு பிரதிநிதி சுரேஷ் அவர்களும், 14வது வார்டு பிரதிநிதி மணி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் மூலமாக மேலும் ஒன்றிய, நகர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்கின்றனர்.
-
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications