Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்!

அரிவாளால் ரவுடி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி -வீடியோ

    கரூர்: நண்பர்களுடன் நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாடிய மணிகண்டனைதான், கொத்தோடு அள்ளி செல்ல, கரூர் போலீஸார் வலை வீசி உள்ளனர்.

    ஒரு காலத்தில் ரொம்பவும் பயங்கரமான ஆயுதங்கள் என்று நாம் சொன்ன அரிவாள், கத்தி எல்லாம் இன்றைய இளம் ரவுடிகளிடம் அசால்டாக புழங்கி வருகிறது.

    Karur Rowdy birthday celebration with knife

    இவர்கள் எல்லாம் தாங்கள் ரவுடிகள் என்பதையே ஒரு கெத்தாக நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். வருஷந்தோறும் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். அதுவும் நடுரோட்டில் கொண்டாடினால்தான் இவர்களுக்கு சிறப்பு. கையில் அரிவாளை கொண்டு கேக்கை வெட்டினால்தான் சென்ட்டிமென்டே!

    Karur Rowdy birthday celebration with knife

    இப்படிதான் சென்னையில் பல இடங்களில் அரிவாளால் கேக் வெட்டியவர்கள் இப்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்கள். இதுபோல தமிழகம் முழுதும் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருவதால், போலீசார் கடும் நடவடிக்கைகளை தவறால் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரிலும் அரிவாள் கலாச்சாரம் பரவி உள்ளது.

    பசுபதிபாளையம் காவல்நிலைய சரகம், தொழிற்பேட்டையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூர் ரவுடி பெயர் மணிகண்டன். இவருக்குதான் பிறந்த நாள். நடுராத்திரி, நடுரோட்டில் ஒரு டேபிளில் கேக் வைக்கப்பட்டு உள்ளது. பாதி ரவுடிகள் பேன்ட், பாதி ரவுடிகள் லுங்கி கட்டி உள்ளனர். நண்பர்கள் அதாவது சக ரவுடிகள் கைகளை தட்ட, வீச்சரிவாளால் கேக் வெட்டினார் மணிகண்டன். இதுதான் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது. இவரு எப்போ களி தின்ன போறாரோ? தெரியவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+