செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்.. உயிரைவிட்ட மகன்.. தாயும் விஷத்தை தின்று விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

கரூர்: செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால், மனம் உடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் துக்கம் தாளாமல் அவரது தாய் விஷத்தை தின்று உயிரிழந்தார். இந்த சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துக்கம் தாங்காமல் அவரது தாய் விஷம் தின்று பரிதாபமாக இறந்தார்.

karur: Son and mother die due to cell phone

கரூர் மாவட்டம் சுண்டு குழிப்பட்டியை சேர்ந்தவர் 45 வயதாகும் கோவிந்தராஜ் லாரி டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி வயது 44. இந்த தம்பதியின் 23 வயதில் செல்வராஜ் என்ற மகன் இருந்தார். இவர் டிகிரி முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுண்டு குழிப்பட்டிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்தே செல்வராஜ் தொடர்ந்து செல்போனை பார்த்து கொண்டே இருந்ததால் அவரை பெற்றோர் கண்டித்திருக்கிறார்கள்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் வியாழக்கிழமை மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து தாய் சுமதி அதிர்ச்சியில் உறைந்தார். மகன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் கதறி அழுத சுமதி சிறிது நேரத்தில் திடீரென அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

karur: Son and mother die due to cell phone

அங்கு அவருக்கு முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்கொலை செய்வது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வல்ல. தற்கொலை மனநிலை வந்தால் தயவு செய்து அரசின் உதவி எண் ஆனா 104க்கு அழையுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+