Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு அடிமேல் அடி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. பிரசார வாகனத்த எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து விஜய்யின் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் பிரசார வாகனத்தை விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் எனவும் தகவல் வெளியானது. இதற்கு தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தநிலையில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் பட சென்சார் விவகாரம், விஜய்க்கு சிபிஐ சம்மன், தற்போது வாகனத்தை எடுத்து சென்றது என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

karur stampede Case CBI has seized the campaign vehicle of TVK leader Vijay

கரூர் கூட்டநெரிசல் வழக்கு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தகள் என 41 பேர் பலியானார்கள். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். மேலும் கடந்த மாதம் 19-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினரும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகளும் அங்கு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

விஜய்யின் பிரசார வாகனம்

நேற்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். விஜய்க்கு நாளை மறுநாள் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், இன்று விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு பேருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த பேருந்தில் ஆய்வு நடைபெறுகிறது. பிரசார வாகன டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் பரவியது. சிபிஐ பறிமுதல் செய்துள்ளதால் விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் என கூறப்பட்டது.

அடுத்தடுத்து விழும் அடி

இந்த நிலையில் தவெகவினர் இதனை மறுத்துள்ளனர். கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள விஜய்யின் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு தான் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் அவரது பிரசார வாகனத்தில் ஆய்வு செய்து வருவதும், அவரது டிரைவரிடம் விசாரணை நடத்துவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+