கரூர் சம்பவம்.. சிபிஐ சரமாரி கேள்வி.. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெகர் உயர் மட்ட நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். கூட்ட நெரிசல் தொடர்பாக நேற்று சராமாரியாக சிபிஐ கேள்வி எழுப்பிய நிலையில், இன்றும் அது தொடர்பாக விசாரணை நீடிப்பதாக தெரிகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சிபிஐ விசாரணைக்காக கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று நவீன கருவிகளை வைத்து சாலையின் அகலம், நீளம் உள்ளிட்டவை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன்பின்னர் கரூர் காவல் அதிகாரிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அங்கு கடை வைத்து இருந்த வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று தவெக உயர் மட்ட நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது.
10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நேற்று இரவு விசரணை முடிந்து புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக நேற்று, தவெக நிர்வாகிகளிடம் எத்தனை மணிக்கு விஜய் பிரசாரம் தொடங்கினார். கூட்டத்தில் எவ்வளவு பேர் பங்கேற்றனர். எவ்வளவு பேர் எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. தற்போது இரண்டாவது நாளாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
பல்வேறு கேள்விகளை எழுப்பி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது. கரூர் கூட்ட நெரிசல் நடைபெற்ற போது, விஜய்யின் வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா பயணம் செய்ததால், அவரிடம் நடைபெற்று வரும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
* கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் வேண்டும் என்றே தாமதமாக வந்தாரா?
* அதிக கூட்டம் இருப்பதால் திட்டமிட்ட இடத்திற்கு முன்பே விஜய் பேசுமாறு தவெக நிர்வாகிகளிடம் போலீஸ் அதிகாரிகள் கூறினார்களா?
* போலீசார் அறிவுறுத்தியும் பெரும் கூட்டத்திற்குள் பேருந்தை கொண்டு செல்ல உத்தரவிட்டது யார்?
* விஜய் பேசிக்கொண்டு இருந்த போதே ஆம்புலன்ஸ் வந்த நிலையில், உண்மை நிலவரம் விஜய்யிடம் எடுத்து கூறப்படவில்லையா
* கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்த நிலையில், தண்ணீர் பாட்டில்களை விஜய் வீசி எறிந்த பிறகும் தொடர்ந்து பேசியது ஏன்?
* தவெக பிரசார கூட்டத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர்?
* தொண்டர்கள் வருகை மற்றும் ஏற்பாடுகளை கவனித்துக்கொண்ட நிர்வாகிகள் யார்?
* நண்பகல் 12 மணிக்கு விஜய் பேசுவதாக கூறிவிட்டு தாமதாக வந்தது ஏன் என சரமாரி கேள்விகளை சிபிஐ எழுப்பியதாகவும், இதற்க் தவெக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய தகவலையே பதிலாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications