விஜய் பேசும்போது மின்சாரத்தை.. துண்டிக்க கோரிக்கை வைத்ததே தவெக தான்! மின் வாரியம் முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கரூர் பிரச்சாரத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே கூட்ட நெரிசலுக்குத் திடீரென அங்கு ஏற்பட்ட மின் தடையே காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மின்வாரியம், விஜய் அங்குப் பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கரூரில் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மிக மோசமான ஒரு பேரழிவு நடந்தது. அங்குத் திடீரெனக் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Karur stampede Power was not stopped while Vijay was speaking in Karur says TANGEDCO officials

விஜய் பேசும்போது மின்தடை?

இதற்கிடையே கரூரில் விஜய் பேசும்போது திடீரென மின் தடை ஏற்பட்டதாகவும் இதுவே அங்குக் கூட்ட நெரிசல் அதிகரிக்கக் காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இருப்பினும், விஜய் அங்குப் பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை என்று மின்வாரியத் தலைமை பொறியாளர் ராஜலட்சுமி விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய் பேசும்போது மின்சாரம் முழுமையாக இருந்தது என்றும் அருகே இருந்த கடைகளில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது என்றும் எனவே மின்தடை என்பது பொய்யான தகவல் எனத் தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

முக்கிய விளக்கம்

தவெகவினர் வைத்திருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் விளக்குகள் கூட்ட நெரிசலால் அணைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி, தவெகவினரே மின் இணைப்பு துண்டிக்கச் சொன்னதாகவும் இருப்பினும் அந்த கோரிக்கையை மின்வாரியம் மறுத்துவிட்டதாகவும் ராஜலட்சுமி கூறினார்.

மின் தடை இல்லை

அவர் மேலும் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நடைபெற்ற வேலூச்சாமிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் உரையாற்றும்போது தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. அனைத்துப் புகைப்படங்களிலும் சம்பவம் நடந்தபோது தெருவிளக்குகள் மற்றும் அருகே இருந்த கடைகளில் வெளிச்சம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, உரையாற்றும்போது மின் தடை என்பதைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேலும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பொருத்தியிருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் லைட்கள் தான் கூட்ட நெரிசலால் ஆஃப் ஆகிவிட்டது.

கோரிக்கை வைத்ததே தவெக தான்

முன்னதாக தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மக்கள் சந்திப்பு தொடர்பாக மனு அளித்திருந்தார். அதில் வேலுச்சாமிபுரம் நெரிசலான பகுதி என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் பாதுகாப்பு கருதி கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சாரத்தை நிறுத்துமாறு கோரிக்கை கடிதம் கொடுத்தார். கடந்த 26ம் தேதி இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அன்றைய தினமே இந்த கோரிக்கையை மறுத்தோம்.

கரூரில் விஜய் வருகைக்குக் காத்திருந்தபோது சில தொண்டர்கள் மரத்தின் மீது ஏறினார்கள். அப்போது மட்டும் சிறிது நேரம் மின்சாரத்தை நிறுத்தினோம். இவை அனைத்தும் விஜய் வருவதற்கு முன்பு நடந்தவை. விஜய் வந்தபிறகு இது எதுவும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.

நடந்தது இதுதான்

விஜய் வருவதற்கு முன்பு சிலர் டிரான்ஸ்ஃபார்மரில் ஏறினார்கள். சிலர் மரத்தின் மீது ஏறினார்கள். வெயிட் தாங்க முடியாமல் அவர்கள் மின்சார லைனில் விழும் ஆபத்து இருந்தது. அது ரொம்ப ஆபத்தாகப் போய்விடும் என்பதால் மின்சாரத்தைச் சிறிது நேரம் துண்டித்தோம். போலீசாரிடம் சொல்லி, மேலே இருந்தவர்களைக் கீழே இறக்கிவிட்டு மின் சப்ளையே கொடுத்துவிட்டோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+