கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரூர் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது யார்?.. வேதியியல் புக்கில் குறியீடுகள்! சபரிமாலா பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும். அந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில் அவர் படித்து கொண்டிருந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியரே காரணம் என சமூக ஆர்வலர் சபரிமாலா பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    Karur Girl-ஐ தற்கொலைக்கு தூண்டியது யார்?.. Chemistry Book-ல் குறியீடுகள்! | Oneindia Tamil

    கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி ,பெண் நானாக இருக்க வேண்டும் எனவும் ஒரு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு

    மேலும், அந்த கடிதத்தில் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் யார் என்பது குறித்து கூறுவதற்கு பயமாக இருக்கிறது என அந்தக் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சமூக ஆர்வலர் சபரிமாலா

    சமூக ஆர்வலர் சபரிமாலா

    இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வந்த சமூக ஆர்வலர் சபரிமாலா பெண்ணின் தாய் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பத்தாம் வகுப்பு வரை மாணவி பயின்ற பள்ளியில் இருந்து ஆறுதல் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால், அந்த மாணவி 11,12, ஆம் வகுப்பு பயின்ற பள்ளியில் இருந்து ஒருவர் கூட ஆறுதல் தெரிவிக்க வரவில்லை.

    மாணவி

    மாணவி

    நீட் தேர்வுக்கு தயாராவதற்காக அந்த பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி தற்கொலைக்கு பின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையம் சென்ற உறவினர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. கரூரில் 17 வயது பெண் உயிரிழந்த சம்பவத்தில் அந்த பெண் படிக்கும் பள்ளியில் உள்ள வேதியியல் ஆசிரியரே காரணம். வேதியியல் பாட நூல்களில் பல்வேறு குறியீடுகளை மாணவி தெளிவாக விளக்கியுள்ளார்.

    பாலியல் தொடர்பான புகார்கள்

    பாலியல் தொடர்பான புகார்கள்


    இந்தப் பள்ளியில் பணிபுரியும் பல்வேறு ஆசிரியர்கள் மீது பாலியல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆனால் போலீசார் விசாரணையை திசை திருப்புகின்றனர். எனவே இந்த கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை உடனடியாக தமிழக அரசு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமில்லாமல் பாலியல் வன்கொடுமை தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

    பாலியல் துன்புறுத்தல்

    பாலியல் துன்புறுத்தல்

    மேலும் பள்ளி சிறுமிகள், தங்களுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் ஏற்படும்போது உடனடியாக இது குறித்து தங்களிடம் தாயிடம் தெரிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்வதற்காக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனவும் சபரிமாலா பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Social Activist Sabarimala says that Chemistry teacher is the main reason for Karur student suicide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X