Karur Stampede: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் இறந்தவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் அந்த 40 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். பகல் 12 மணிக்கு வரவேண்டிய அவர் இரவு 8 மணிக்கு வந்தடைந்தார். அதாவது விஜய்யை பார்க்க காலை முதலே கூட்டம் கூடியது.

karur vijay

இந்த நிலையில் 100 அடி குறுகலான சாலையில் 60 அடி விஜய்யின் பேருந்து நின்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதனால் அவர்களால் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

ஒரு குழந்தையை காணவில்லை என தெரிவித்ததும் அங்கிருந்த கூட்டம் சிதறி ஓடியது. இதனாலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதுவரை 39 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் பெண் குழந்தைகள் 5 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண்கள் 17 பேர், ஆண்கள் 13 பேர் என 39 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவின் (31) என்பவர் இறந்துவிட்டார். இவர் நேற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று மீண்டும் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது.

karur vijay

இறந்தவர்களின் விவரங்களை பார்க்கலாம்:

  1. கரூர் தாமரைக்கண்ணன் (25)
  2. ஹேமலதா (28)
  3. சாய்லட்சணா (8)
  4. சாய் ஜீவா (4)
  5. சுகன்யா (33)
  6. ஆகாஷ் (23)
  7. தனுஷ்குமார் (24)
  8. வடிவழகன் (54)
  9. ரேவதி (52)
  10. சந்திரா (40)
  11. குருவிஷ்ணு (2)
  12. ரமேஷ் (32)
  13. சனுஜ் (13)
  14. ரவிகிருஷ்ணன் (32)
  15. பிரியதர்ஷினி (35)
  16. தரணிகா (14)
  17. பழனியம்மாள் (11)
  18. கோகிலா (14)
  19. மண்மங்கலம் மகேஷ்வரி (45)
  20. அரவக்குறிச்சி அஜிதா (21)
  21. கரூர் மாலதி (36)
  22. கரூர் சுமதி (50)
  23. காங்கேயம் மணிகண்டன் (33)
  24. ஈரோடு சதீஷ்குமார் (34)
  25. கரூர் கிருத்திக்யாதவ் (7)
  26. சேலம் ஆனந்த் (26)
  27. குஜியம்பாறை சங்கர்கணேஷ் (45)
  28. கரூர் விஜயராணி (42)
  29. காங்கேயம் கோகுல பிரியா (28)
  30. ஒட்டன்சத்திரம் பாத்திமாபானு (29)
  31. கரூர் கிஷோர் (17)
  32. கரூர் ஜெயா (55)
  33. கரூர் அருக்காணி (60)
  34. புகளூர் ஜெயந்தி (43)
  35. சேலம் மேட்டூரை சேர்ந்த ஸ்ரீநாத் (16)
  36. ஈரோடு ஜம்பை பகுதியை சேர்ந்த மோகன் (19)
  37. ஏமூர் பிரித்திக் (5)
  38. வீரகேரளம் சரவணன்
  39. கவின் (31)
karur vijay

கரூரில் மட்டும் 27 பேர் பலியாகிவிட்டனர். தற்போது வரை அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன.

karur vijay
karur vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+