கமல்ஹாசனை கலங்கடித்த கரூர்.. நெஞ்சு பதைக்கிறது.. வார்த்தைகளின்றி திகைக்கிறேன்.. கண்ணீர் பதிவு
கரூர்: கரூரில் விஜய்யை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் திரண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சுமார் 31 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.. மருத்துவமனையில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலைவர்கள் தங்களது இரங்கலையும், வேதனையையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், கமல்ஹாசன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, விஜய்யின் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் கூட்டம்
ஆனால், விஜய் பேசிவிட்டு கிளம்பிய பிறகு, கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது.. அப்போதுதான் நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.. தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியானது.. விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்..
தொடர் சிகிச்சை
தற்போது 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டோருக்கான உதவிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
தலைவர்கள் இரங்கல்
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.. அதேபோல தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. அந்தவகையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்," எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
நெஞ்சு பதைக்கிறது
அதில், "நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்," எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், "கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று தெரிவித்துள்ளார்." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications