விந்தணு மாறிடுச்சா? என்னங்க சொல்றீங்க.. முருகேசன் வீட்டிலே ஜேஜேன்னு ஒரே கூட்டம்.. கலக்குது கரூர்
கரூர்: முருகேசன் வீட்டில் அதிசயத்தை பார்த்தீங்களா? கரூர் மாவட்டமே ஆச்சரியத்தில் உள்ளது.. என்ன காரணம்?
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ளது சேமங்கி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் முருகேசன்.. 55 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.. தன்னுடைய வீட்டிலேயே நிறைய மாடுகளை வளர்த்து வருகிறார்...

அந்த மாடுகள்: அந்தமாடுகளில் ஒரு எருமை மாடு ஒன்று சினை பிடிக்காமலேயே இருந்துள்ளது.. இதனால், கால்நடை டாக்டரை அணுகி, சினை ஊசி போட்டு வந்துள்ளார்.. இதையடுத்து, அந்த மாடு சினையானது...
கொஞ்ச நாளில், அந்த எருமைமாடு, கன்றுக்குட்டியையும் ஈன்றுவிட்டது.. ஆனால், அந்த கன்றுக்குட்டியை பார்த்து முருகேசன் திகைத்து போய்விட்டார். காரணம், அந்த கன்றுக்குட்டி முழுக்க முழுக்க வெள்ளை கலரில் இருந்துள்ளது... முருகேசன் வீட்டில் இப்படி கன்றுக்குட்டி பிறந்திருக்கும் செய்தி, சுற்றுவட்டாரம் முழுவதும் பரவிவிட்டது..
வெள்ளை கலர்: பிறகு, வெள்ளை கலர் குட்டியை பார்ப்பதற்காக, முருகேசன் விட்டிற்கள் பொதுமக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.. இதனால் முருகேசன் வீட்டில் எப்பவுமே திருவிழா போல கூட்டம் காட்சியளிக்கிறதாம். அதுமட்டுமல்ல, அந்த வெள்ளை எருமையுடன் பலரும் போட்டி போட்டுக் கொண்டு, செல்பி எடுத்து வருகிறார்கள்..
ஆனால், இந்த கன்றுக்குட்டி ஏன் வெள்ளைக்கலரில் பிறந்திருக்கிறது என்று தெரியவில்லை.. சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்துதான் தருவிக்கப்படுகிறதாம்.. அப்படி வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம் என்கிறார்கள்..!
மெலனின் குறைபாடு: மற்றொருபக்கம், எருமைக்கு தோலில் மெலனின் குறைபாடு உள்ளதாக மருத்துவ காரணம் சொல்லப்படுகிறது.. அதாவது, உடம்பில் மெலனின் சுரக்காவிட்டால், இப்படி வெள்ளை கலரில் நிறம் மாறுமாம், அதுவும், 10 ஆயிரத்தில், ஒரு உயிரினம்தான் இப்படி பிறக்குமாம்..
இப்படி 2 விதமான காரணங்கள் சொல்லப்படுவதால், இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆக மொத்தம், இப்ப முருகேசன் ரொம்ப ஃபேமஸ் ஆகிவிட்டார்...!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications