பெரிய தாராபுரத்தில் சந்தியா.. சின்ன தாராபுரத்தில் கிருத்திகா.. கரூர் பைனான்சியரால் கைதானது எப்படி?
கரூர்: கரூரில் நிதி நிறுவன அதிபரை இரண்டாவது திருமணம் செய்த நிலையில், அவரது பணம், நகை ஆகியவற்றை திருடிச் சென்ற புகாரில் இளம்பெண் கிருத்திகா கைதாகி உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 3வது நபருடன் திருமணம் செய்ய தயாராக இருந்தது தெரிய வந்துள்ளது. கிருத்திகா திருச்சி மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பைனான்சியர் செல்வக்குமார். இவருக்கும் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செஞ்சேரி மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு கல்யாணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு நிதி நிறுவன அதிபர் செல்வக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் குடும்பத்துடன் தங்கி பைனான்ஸ் தொழில் நடத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், திருமணம் ஆனது முதல் தனது மனைவி கிருத்திகா அடிக்கடி தாய் பாலாமணியை பார்க்கச் செல்வதாகக் கூறிசென்று வந்தாராம். ஒரு கட்டத்தில் செல்வக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, கிருத்திகாவுக்கும் செல்வக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு தாய் பாலாமணியை பார்க்கச் செல்வதாகக் கூறி கரூர் மாவட்டம் எலவனூர் பகுதிக்குச் சென்ற கிருத்திகா, கணவரின் வீட்டின் பீரோவில் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாராம். இது தொடர்பாக அவரது மாமனார் தனது மகன் செல்வக்குமாருக்கு போனில் தகவல் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செல்வக்குமார் கிருத்திகாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, கிருத்திகா வீட்டுக்குச் சென்று செல்வக்குமார் பார்த்துள்ளார். அங்கு கிருத்திகா வீட்டை காலி செய்து சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியிருக்கிறார்கள். பிறகு உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்ததன் அடிப்படையில், கிருத்திகா சுல்தான்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட செஞ்சேரிமலை பகுதியில் தலைமறைவாக இருந்தாராம்.
பின்னர் கிருத்திகாவை செல்வக்குமார் சேர்ந்து வாழ அழைத்தும் அவர் வர மறுத்துள்ளாராம். பின்னர் கிருத்திகா, தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் கேட்டு தன்னை துன்புறுத்தியதாக புகார் அளிப்பேன் என செல்வகுமாரை மிரட்டினாராம். இதன் பின்னர் தான் திருமணம் மூலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பைனான்சியர் செல்வக்குமார், சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எனினும் போலீசார் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுபற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்..
அதன்பின்னர் வழக்கை போலீசார் விசாரித்தனர். அப்போத விசாரணைக்கு ஆஜரான கிருத்திகா, தான் முதல் கணவரிடமிருந்து விவாகரத்து ஏதும் பெறவில்லை எனவும், தான் விரும்பியவர்களுடன் வாழ்வேன் எனவும் கூறினாராம். இதனால் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இதனால் விரக்தி அடைந்த செல்வக்குமார், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தன் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மனு அனுப்பியிருக்கிறார்.
இந்நிலையில், மூன்றாவது திருமணம் செய்வதற்கு சூர்யா என்ற இளைஞருடன் கிருத்திகா தொடர்பில் இருந்ததாக புகார் அளித்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் போலீஸ் மேற்கொள்ளவில்லையாம். இதனால் பைனான்ஸ் அதிபரான செல்வக்குமார், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தன்னை ஏமாற்றி நகை மற்றும் பணம் ஆகியவற்றை ஏமாற்றிச் சென்ற கிருத்திகா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யக் கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை முடிந்து கிருத்திகா மற்றும் அவரது தாய் பாலாமணி ஆகியோரை காவல் துறை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை சின்னதாபுரம் காவல்துறையினர் பாலாமணி (58), கிருத்திகா ஆகிய இருவரையும் விசாரணைக்கு சின்னதாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, சின்னதாராபுரம் காவல் நிலையத்திலிருந்து கிருத்திகா கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் கிருத்திகாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி உத்தரவின்படி, கிருத்திகா திருச்சி மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பல திருமணங்கள் செய்து ஆண்களை ஏமாற்றிய சந்தியா என்ற பெண் கைது செய்யப்பட்ட சில நாட்களில், மேலும் ஒரு இளம்பெண் அதே போன்ற பாணியில் சின்ன தாராபுரத்தில கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications