பாஜக பாலிடிக்ஸான விஜயின் பனையூர் அரசியல்! திமுகவிடம் அதிக சீட் கேட்போம்! மார்க்சிஸ்ட் சண்முகம் பளீர்
சென்னை: விஜய் அரசியலை கரூர் சம்பவத்திற்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம் எனவும், கொள்கை எதிரியான பாஜகவுக்கு எதிராக அதிகமாக பேசுவதில்லை என கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம். மேலும், திமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பெறுவோம் எனவும், கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம், கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசு மசோதா ஒப்புதலுக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக 100 நாள் வேலை உத்தரவாத சட்டத்தை, வேலைவாய்ப்பு என்று மாற்றுகின்றனர்.

மார்க்சிஸ்ட் சண்முகம்
மகாத்மா காந்தி மீது உள்ள வெறுப்பு காரணமாக அந்தத் திட்டத்திற்கு பூஜ்ஜியபாபு என்று பெயரை மாற்றுக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. சட்டம், ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கும்போது, நீதிபதிகள் மத்திய படை, தொழில் பாதுகாப்பு படையை பயன்படுத்துவது ஃபேசனாகிவிட்டது. இது அத்துமீறிய செயல். நீதிபதிகள் வரம்பு மீறி பேசிவருவது அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கை உண்டாக்குகிறது.
கேரளா உள்ளாட்சி தேர்தல்
இது வன்மையான கண்டனத்துக்குரியது. நீதிபதி RSS கொள்கையை தனது தீர்ப்பில் வெளிப்படுத்துகிறார். கேரளா உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு மாநகராட்சியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஊடகங்களில் பாஜகவை கொண்டாடி வருகின்றனர்.
விஜய் அரசியல்
விஜய் அரசியலை கரூர் சம்பவத்திற்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் பேசிய விஜய், தற்போது பாஜகவுக்கு எதிராக அதிகமாக பேசுவதில்லை. பாண்டிச்சேரி கூட்டத்திலும் அது வெளிப்பட்டது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் தான் தற்போதும் இருக்கிறோம். ஆனால் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளை பேசாமல் இருந்ததில்லை. கூட்டணி சார்ந்த விஷயங்களில் திமுகவிடம் அதிக இடங்களை பெறுவதில் தெளிவாக இருக்கிறோம். கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கின்றனர்" என்றார்.
-
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications