கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாமே உங்க ஆட்சியில் கொண்டு வந்ததுதான் – ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி

Google Oneindia Tamil News

கரூர்: விவசாய மின் இணைப்புகளுக்கு மின் பொருத்தப்படும் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வத்திற்கு அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2017 ஆம் ஆண்டிலேயே விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்துவது தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Recommended Video

    எல்லாமே உங்க ஆட்சியில் கொண்டு வந்ததுதான் – ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தபடுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை எனவும், ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு ஆட்சியில் இல்லாத ஒரு பேச்சு என்று இல்லாமல் விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் வகையில் மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    மேலும் அந்த அறிக்கையில், ஒரு திட்டத்தை அதிமுக செயல்படுத்தினால் அது ரத்தம் , அதே திட்டத்தை திமுக செயல் படுத்தினால் அது தக்காளி சட்னியா என கேள்வி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பி இருந்தார்.

    உசிலம்பட்டியில் ஷாக்! 5 நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்.. பெற்றோர் தலைமறைவு.. பெண் சிசுக்கொலையா? உசிலம்பட்டியில் ஷாக்! 5 நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்.. பெற்றோர் தலைமறைவு.. பெண் சிசுக்கொலையா?

    விவசாய மின்மீட்டர்

    விவசாய மின்மீட்டர்

    இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்துவது 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு எனவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்து 4.50 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    அதிமுக ஆட்சியிலேயே ஜிஎஸ்டி

    அதிமுக ஆட்சியிலேயே ஜிஎஸ்டி

    மின்துறையில் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த அதிமுக ஆட்சியிலேயே 2018ல் இருந்தே கொண்டு வரப்பட்டது எனவும், புதிதாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதை போல எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கூறி வருகிறார் என கூறிய செந்தில் பலாஜி, மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    அதிமுக ஆட்சியில் பணி தொடக்கம்

    அதிமுக ஆட்சியில் பணி தொடக்கம்

    கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி என்பது 53 சதம் மட்டுமே, 2017 ஆம் ஆண்டிலேயே விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்துவது தொடங்கப்பட்டது எனவும், இப்போதுதான் மீட்டர் பொருத்தப்படுவது போல அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார் எனக்கூறிய செந்தில்பாலாஜி, விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவது அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது எனவும், இப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது எனக் கூறினார்.

    தனி அக்கறை கொண்ட திமுக அரசு

    தனி அக்கறை கொண்ட திமுக அரசு

    விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும், தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கி அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது எனவும், அவர்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது எனக் கூறிய செந்தில் பாலாஜி, கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

    English summary
    Dmk Minister Senthil Balaji has told Deputy Leader of the Opposition Panneer Selvam that the installation of electricity meters for farmers has already started in 2017.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X