கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின் தடையா? வாய்ப்பேயில்லை.. மற்ற மாநிலங்களுக்கே மின்சாரம் கொடுக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Google Oneindia Tamil News

கரூர் : தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 6220 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கரூரில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Recommended Video

    மற்ற மாநிலங்களுக்கே மின்சாரம் கொடுக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

    கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

    இதனை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்/இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் மின்வெட்டா? பிற மாநிலங்களுக்கே மின்சப்ளை செய்கிறோம்..அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடிதமிழகத்தில் மின்வெட்டா? பிற மாநிலங்களுக்கே மின்சப்ளை செய்கிறோம்..அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

    அமைச்சர் செந்தில்பாலாஜி

    அமைச்சர் செந்தில்பாலாஜி

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாட்களுக்கு மேல் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை தற்போது இல்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குள் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எந்த பாதிப்பும் இல்லை

    எந்த பாதிப்பும் இல்லை

    மின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மின்னகம் மின் நுகர்வோர் மையத்திற்கு இதுவரை 8 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதில் 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    மின் உற்பத்தி

    மின் உற்பத்தி

    மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விட்ட பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். தமிழகத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிக அளவில் தற்போது கிடைத்து வருகிறது. இதன் காரணமாக செலவை குறைக்கும் வகையில், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட மற்ற வகைகளில் கிடைக்கப்பெறும் மின்உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருகிறது.

    காற்றாலை மின்னுற்பத்தி

    காற்றாலை மின்னுற்பத்தி

    தற்போது தமிழகத்தில் மின் உற்பத்தி 4320 மெகாவாட். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி கூடுதலாக 6 ஆயிரத்து 220 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என பேசினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamil Nadu Electricity Minister Senthil Balaji has said that steps are being taken to increase the own power generation in Tamil Nadu to an additional 6220 MW within the next 5 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X