கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!
கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக பரவி வந்த தகவல்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே சில முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், விஜயபாஸ்கரும் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கட்சி தாவல்கள், கூட்டணி மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்த சம்பவங்களும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தின. குறிப்பாக முன்னாள் எம்எல்ஏ மரகதம் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் பேசுபொருளானது.
எம்.ஆர். விஜயபாஸ்கர்
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. மேலும், வரும் ஜூன் 22-ஆம் தேதி கட்சி தாவுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற தகவல்களும் பரவின. இதனால் கரூர் மற்றும் புதுக்கோட்டை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்றார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கரிடம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அரசியல் யூகங்கள்
அதற்கு பதிலளித்த அவர், "நானும் சி. விஜயபாஸ்கரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி. சில ஊடகங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றன" என்று தெளிவாக கூறினார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த அரசியல் யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக
எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த விளக்கம் கரூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக பார்க்கப்படும் அவர் கட்சி மாறினால், அது மாவட்ட அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. அதே நேரத்தில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி அதிருப்தி முற்றிலும் அடங்கிவிட்டதாக கூற முடியாத சூழல் தொடர்கிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக அதிருப்தி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
சி. விஜயபாஸ்கர்
குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அவர் மறைமுகமாக விமர்சித்ததாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டையில் தனது ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
ஒருபுறம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், மறுபுறம் சி. விஜயபாஸ்கரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றன. அதிமுகவில் இருந்து இவர்கள் வெளியேறுவார்களா?, அல்லது மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிணைவார்களா? என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும் என்கின்றனர் அதிமுகவினர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications