கரூரில் உலா வரும் ஏலியன்கள்? வானில் வட்டமிடும் மர்ம வெளிச்சம்! பறக்கும் தட்டா என மக்கள் குழப்பம்!
கரூர்: கரூரில் இரவு நேரத்தில் வானில் அங்கும், இங்குமாக வட்டமிட்ட மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அருகில் ஏலியன்கள் வருகையா? என்று பொதுமக்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தற்போது மர்ம ஒளி தெரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உலகம் முழுவதும் வானில் மர்ம ஒளியானது அடிக்கடி வந்து செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக வானில் தோன்றும் மர்ம ஒளியை வேற்று கிரக வாசிகளான ஏலியன்கள் ஸ்பேஸ் சிப் எனப்படும் வானூர்திகள் மூலம் வந்து செல்வதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் வானில் இடி, மின்னல் அடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மேகக் கூட்டத்தில் இருந்து ஒரு மர்ம ஒளி ஒன்று அங்கும், இங்குமாக வட்டமடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக ஹாலிவுட் படங்களில் வரும் ஏலியன்கள் பயன்படுத்தும் வானூர்திகள் வடிவில், அந்த மர்ம ஒளி தென்பட்டதும் அந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.
கரூரில் இரவு நேரத்தில் வானில் அங்கும் இங்குமாக வட்டமிட்ட மர்ம ஒளி பொதுமக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. மர்மமான வெளிச்சத்தை மொபைல் கேமராவில் படம் பிடித்த மக்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் "ஏலியன்கள் தமிழகம் வந்துவிட்டார்களா?" என்ற விவாதம் கரூர் வாசிகளிடையே எழுந்துள்ளது.
இந்த மர்ம ஒளி, வெள்ளை நிறமாகவும், சில நேரங்களில் பளபளப்பாகவும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருசிலர் இதை வெளிநாடுகளில் புகழ்பெற்ற "ஏலியன்களின் பறக்கும் தட்டு" என்று குறிப்பிடுகின்றனர். அதே சமயம், சிலர் இது பாகிஸ்தான் ட்ரோன் அல்லது ஏவுகணையாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் நிலை காரணமாக இந்த மர்ம ஒளி அதிக கவனம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் சிலர் கோயில் திருவிழா அல்லது கலை நிகழ்ச்சியில் அதிக சக்தி கொண்ட லேசர் லைட் வானில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் இந்த மர்ம ஒளி தொடர்பான விளக்கத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பரவும் இந்த மர்ம ஒளி வீடியோ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞான பூர்வமான விளக்கமின்றி பரபரப்பு அதிகரிக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ விளக்கம் மட்டுமே பொதுமக்களின் அச்சத்தை அகற்றும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications