Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் அருகே காலையிலயே.. அரசு பஸ்ஸூக்கு அடியில் சிக்கிய கார்.. அந்த 5 பேர்? குளித்தலை அருகே என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் - திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது, பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. தகவலறிந்த குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் திருச்சியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.

karur government bus kulithalai

கட்டுப்பாட்டை இழந்தது

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பஸ்ஸூம், காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பஸ்ஸின் அடிப்பகுதியில் கார் சிக்கிக்கொண்டதால், முழுமையாக நொறுங்கி விட்டது.

இது குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் காரில் இருந்த 2 பெண்கள், 3 ஆண்கள் என 5 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி இறந்துள்ளனர்.. இதையடுத்து, உயிரிழந்தவர்கள் 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டுக் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. பிறகு உடனடியாக விசாரணையை துவக்கினர்.

மீட்பு பணிகள்

காரில் வந்தவர்கள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதி மலைநகர் அருகே உள்ள சுகுனாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது. செல்வராஜ் , கலையரசி, இவர்களது மகன் அர்ஜூன், மகள் அகல்யா மற்றும் கார் டிரைவர் ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள், ஒரத்தநாடு அருகே உள்ள கிழையூரில் உள்ள அக்கினி வீரனார் கோயிலுக்குத் தரிசனம் செய்ய காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.. ஆனால், கார் முழுமையாக பஸ்ஸூக்கு அடியில் சிக்கி கொண்டதால், காரை உடனடியாக மீட்க முடியவில்லை.. சுமார் ஒரு மணி நேரம் போராடி காரை வெளியே கொண்டு வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து தொடர்பாகக் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, குளித்தலை டி.எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர், குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி ஆகியோர் என உயர் அதிகாரிகள் பலரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+