கரூர் மரணம் பற்றி கேட்டதும்.. வேகமாக ஏர்போர்ட்டுக்கு போன விஜய்.. போகிற வழியில் நடந்த ஷாக் சம்பவம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் பலர் பலியான நிலையில் அவசரமாக சென்னைக்கு திரும்பினார். அவர் திருச்சி விமான நிலையம் செல்லும் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 39 பேர் வரை பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 39 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.
விஜய் அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றார்
இதையடுத்து விஜய் அவசர அவசரமாக நேற்று வீட்டிற்கு திரும்பினார். விஜய் கரூரில் மக்களை சந்திக்கவோ.. இரங்கல் தெரிவிக்கவோ.. தொண்டர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்யவோ நினைக்கவில்லை. இந்த மரணத்திற்கு இரங்கல் போஸ்ட் கூட விஜய் தாமதமாகவே செய்தார்.
ஆனால் அவசர அவசரமாக அவர் சென்னை விரைந்தார். இதற்காக அவர் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்தார். அவர் திருச்சி சென்ற வழியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் இருந்து விஜய் திருச்சி திரும்பி செல்லும் வழியில் முழுக்க முழுக்க ரசிகர்கள் சாலையில் நிரம்பி இருந்தனர்.
கரூரில் விஜயை பார்க்க மக்கள் கூடி பலர் பலியான நிலையில் அதையும் பொருட்படுத்தாமல்..விஜய் திருச்சி செல்லும் வழியில் மீண்டும் அவரை பார்க்க பலர் கூடி இருந்தனர். நெடுஞ்சாலை முழுக்க இரண்டு பக்கமும் மக்கள் மொத்தமாக கூடி விஜயை பார்க்க நின்றனர். கரூரில் மக்கள் பலியாகி அதை பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருந்த அதே வேளையில் மக்கள் பலர் மொத்தமாக கூடி விஜயை பார்க்க நின்றனர்.
செய்தியாளர்களை சந்திக்காத விஜய்
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே செய்தியாளர்கள் விஜயிடம்.. சார்.. மக்கள் பலியாகி இருக்கிறார்கள் விஜய்.. பலர் செத்துட்டாங்க.. செய்தியாளர்களை பாருங்க.. எங்களிடம் பதில் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால் விஜய் அவர்களை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றார். மக்கள் செத்துட்டாங்க விஜய்.. பதில் சொல்லாமல் போனால் என்ன நியாயம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். ஆனால் விஜய் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications