வாட்ஸ் அப் காலில் வரம்பு மீறிய போலீஸ் இன்ஸ்பெக்டர்.. இளம்பெண் வைத்த ஆப்பு.. கரூரில் தரமான சம்பவம்
கரூர்: கரூரில் புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு, டிபி தெளிவாக இல்லை எனவும் நல்ல போட்டோ அனுப்புமாறும் வரம்பு மீறி இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரண போன் காலில் பேசினால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து வாட்ஸ்-அப்பில் பேசிய இன்ஸ்பெக்டரை சாதுர்யமாக செயல்பட்ட இளம்பெண், இன்ஸ்பெக்டரின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம் பெண் ஒருவரிடம் காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் வரம்பு மீறி பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு பேசும் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வாட்ஸ் அப் டிபி தெளிவாக இல்லை எனவும் தெளிவாக தெரியும்படி வைக்கலாமே எனக் கூறுகிறார்.

அதற்கு அந்த பெண் தெரியாத மாதிரி இருக்க வேண்டும் என்றுதான் அப்படி வைத்துள்ளேன் என சொல்லி சமாளிக்கிறார். அப்போதும் விடாத இன்ஸ்பெக்டர்.. அப்படி என்றாலும் பரவாயில்லை எனக்கு போட்டோ மட்டும் அனுப்புங்கள் என சொல்கிறார். மறக்காம அனுப்புங்க என்றும் இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.
சாதாரண காலில் பேசினால்தான் ரெக்கார்டு செய்து மாட்டி விடுகிறார்கள். வாட்ஸ் அப் காலில் பேசினால் ரெக்கார்டு செய்ய முடியாது எனக் கருதி, இன்ஸ்பெக்டர் பெண்ணிடம் வரம்பு மீறி பேச, இளம்பெண்ணோ மிகவும் சாதுர்யமாக வாட்ஸ் அப் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு விட்டு இன்னொரு போன் மூலமாக வீடியோ ரெக்கார்டு செய்து இருக்கிறார்.
இதனால், இன்ஸ்பெக்டரின் குட்டு அம்பலம் ஆகியுள்ளது. இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணிடம் வரம்பு மீறி பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்க்கு மாற்றப்பட்டுள்ளார். வாட்ஸ் அப் காலில் வந்து பேசி தொல்லை செய்த இன்ஸ்பெக்டரை சாதுர்யமாக செயல்பட்டு அம்பலப்படுத்திய இளம்பெண்ணின் செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள், பொதுமக்கள் புகார் கொடுக்க வரும் போது அவர்களிடம் கனிவாக பேசி, புகார்களை பெற்று, உரிய நடவடிக்கையை தமிழக போலீசார் எடுக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில போலீசார் சபல புத்தியுடன் நடந்து கொண்டு இப்படி நடந்து கொள்வது காவல்துறையினருக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது.
அதிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் செல்போன் எண்ணை குறித்து வைத்துக்கொண்டு அவர்களிடம் ஒரு சில போலீசார் வரம்பு மீறி பேசுவது பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
அதேநேரத்தில் வாட்ஸ்ப் அப் காலில் பேசினால் மாட்டிக்கொள்ள மாட்டோம் என நினைப்பவர்களுக்கு இந்த சம்பவம் அடிவயிற்றில் புளியை கரைப்பதாக அமைந்து இருக்கிறது எனவும் இதுபோன்று வரம்பு மீறி நடந்து கொண்டால் யாராக இருந்தாலும் தைரியமாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுமாதிரியான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications