ஸ்பிரிங் ரோல் தெரியும்.. இதென்ன சார் ரோடு சுருண்டு வருது? கையோடு வரும் புது சாலை.. கரூர் அவலம்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை, போட்ட உடனே கையோடு பெயர்த்து வரும் வகையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை குறித்து அப்பகுதி மக்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி வரை வீரப்பூர் செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். சுமார் 4 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் முடிவடைந்து நேற்று இந்த தார்ச் சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால், முறையாக தரமாக தார்ச்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார்ச் சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தரமற்ற வகையில், சாலை போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கைகளால் கிண்டினால் கூட அடை போல உருண்டு சுருளும் மோசமான நிலையில் இந்த சாலை உள்ளது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள், ரோட்டை கையால் அள்ளிக் காட்டி வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ரோடு போட்ட உடனே இப்படி பெயர்ந்து வந்தால் எத்தனை நாட்களுக்கு தாங்கும், ஒரு மழைக்கு தாங்குமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மறு ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரோட்டை கைகளால் பெயர்த்து பொதுமக்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், கடவூர் ஒன்றிய சேர்மன் செல்வராஜ், மற்றும் ஒப்பந்ததாரர் வீரராகவன் ஆகியோர் ஊர் மக்கள் கடப்பாரையை வைத்து சாலையை உடைப்பதாக போலீசில் புகார் தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications