இவ்வளவு பயமா.. கரூரில் பட்டி பார்முலா புகார்.. செந்தில் பாலாஜி பகிரங்க சவால்
கரூர்: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. செந்தில் பாலாஜி ஈரோடு இடைத்தேர்தல் போல பட்டி பார்முலாவை கரூரிலும் செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக அதிமுக மற்றும் பாஜகவினர் புகார் எழுப்பி வருகிறார்கள். இதற்கு செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
திமுக முன்னாள் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தலுக்காக ஒரு அலுவலகம் திறந்தால் அதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அதை வேட்பாளரின் செலவு கணக்கில் காட்டுகிறோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதலும் பெறுகிறோம். ஒரு வார்டு அல்லது பூத் அளவிலான தேர்தல் பணிகளை எங்கு வைத்து செய்வது. சாலையில் வைத்தா முடியும். இதில் எங்கிருந்து ஈரோடு, கரூர் பார்முலா வருகிறது. ஒரு அலுவலகத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் அதைக் குற்றம் காட்டுவதை ஏற்கலாம். அனுமதி பெற்ற தேர்தல் அலுவலகத்தை எப்படி குற்றம் சாட்ட முடியும். (Senthil Balaji)

அவ்வளவு பயமா
எங்களை பார்த்து அவ்வளவு பயமா. எந்த அரசு அலுவலர் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதை குறிப்பிட்டு சொல்லுங்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளை தான் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்கிறார்கள். ஆதாரமில்லாமல் வெறுமனே குற்றம்சாட்ட கூடாது. கரூர் எஸ்பியை மட்டும் மாற்றவில்லை. 4 எஸ்பிக்களை மாற்றியுள்ளனர். அதற்காக அவர்கள் தவறு செய்தார்கள் என்றாகிவிடாது. புகார் கொடுத்த காரணத்திற்காக வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதான்.
இதுதான் இயற்கை
இதேபோல 2021 தேர்தலில் கரூர் மாவட்ட ஆட்சியரை மாற்றினார்கள். இது தேர்தலின்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. ஒரு தலைபட்சமாக செயல்பட்டிருந்தால் அதிகரிகளை மாற்றியிருக்க வேண்டாமே. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சை அனைவரும் சமம். இதுதான் இயற்கை. எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது. தேர்தல் பணிகளை அதிகாரிகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு எல்லா வார்டுகளிலும் அலுவலகம் தேவைப்பட்டு, போட்டால் என்ன சொல்லுவார்கள். எல்லா கட்சிகளும் தேர்தல் பணிக்காக அலுவலகம் போடுவார்கள் தானே.
கள நிலவரம்
நாங்கள் ஒரு பகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டம் போட்டாலே 5,000 கலந்து கொள்கிறார்கள். அதிமுக ஒரு தொகுதியில் 40,000 வாக்குகள் வாங்கினாலே அதிசயம் தான். இதுதான் கள நிலவரம். அதிமுக - பாஜக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, எங்கள் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவார். கரூரில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக பிரம்மாண்டமான வெற்றி பெறும். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிமுக பாஜக மோசமான வாக்குகளைதான் பெறுவார்கள். அதிலும் கரூர் தொகுதியில் தான் மிக மிக மோசமாக வாக்குகளை பெறுவார்கள்" என்றார்.
-
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications