செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் புது வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு.. விடாது விரட்டும் அதிகாரிகள்
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்து மதிப்பிட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண வசூல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இதற்கு மத்தியில், கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. அதுகுறித்து அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார்.
கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கரூர் ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார். அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார் அசோக்.
அசோக்கின் தலைமறைவு காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த 6 மாதங்களாகவே இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.
இந்த நிலையில் கரூர் நாமக்கல் புறவழிச்சாலை ராம் நகரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் இன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்யும் பணிகள், இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications