கரூர் கூட்டத்தில் என்ன நடந்தது? தவெக சேலம் மாவட்ட செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
கரூர்: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன், இன்று SIT விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற பரிந்துரையின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கடந்த 5 ஆம் தேதி முதல் கரூரில் சம்பவம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து சம்பவம் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சேலம் மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனை விசாரிக்கும் வகையில் ஆய்வுக் குழுவினர் கடந்த இரு தினங்களுக்கு முன் சம்மன் அவருக்கு அனுப்பினர்.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் இன்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.
சிறப்பு புலனாய்வுக்குழு, பார்த்திபனிடம் கரூர் சம்பவத்தின் போது கூட்ட நிர்வாகத்தில் நடந்தது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின் போது, பிரச்சார கூட்டத்தின் ஏற்பாடுகள், கூட்ட நிர்வாகம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.ஐ.டி குழு அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர்.அவர், சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகளை விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசார கூட்டத்திற்கு சவுண்ட் சிஸ்டம் அமைத்த ஆடியோ இன்ஜினியர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினரும் SIT முன் ஆஜராகினர். அவர்கள், கூட்டத்தின் ஆடியோ ஏற்பாடுகள், கூட்ட அளவு, சம்பவத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை!












Click it and Unblock the Notifications