இலவச பெட்ரோல் வேணுமா? மாணவர்களை அழைக்கிறது கரூர் பெட்ரோல் பங்க்!
கரூர்: திருக்குறள் கற்பதை ஊக்குவிக்கும் விதமாக, 20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளி வள்ளுவர் பெட்ரோல் பங்க் என்னும் தனியார் பெட்ரோல் பங்கில், 20 திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மாணவர்களிடமும், பெற்றோரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், நாகம்பள்ளி கிராமம், வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ளது வள்ளுவர் பெட்ரோல் பங்க் என்னும் தனியார் பெட்ரோல் பங்க்.

மாணவர்கள்
இந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவி, மாணவர்கள் மத்தியில் திருக்குறள் பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறளில் 10 குறளை ஒப்புவித்தால் அரை லிட்டரும், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அறிவித்தது. மேலும் இந்தப் போட்டியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

பெட்ரோல் இலவசம்
இதனைத் தொடர்ந்து, பெற்றோருடன் மாணவர்கள் பெட்ரோல் பங்கிற்குச் சென்று திருக்குறளைச் சொல்லி பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கின்றனர். மேலும், இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு ஊக்கமாகவும், படித்ததை மறக்காமல் இருக்க உதவியாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

ஊக்குவிக்க முயற்சி
இந்த திருக்குறள் திட்டம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம், "மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது. மேலும் மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.

ஏன் இந்த நூதன அறிவிப்பு
மேலும், தை மாதம் திருவள்ளுவர் தினம் முதல் ஏப்ரல் 31 வரை மாணவ., மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் போது திருக்குறளை கூறினால் போதும் அவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு அவர்களது வாகனங்களுக்கு பெட்ரோல் இலவசம் என்றதோடு, ஏன் நான் திருக்குறளை அதிக அளவில் நேசிக்கின்றேன் என்றால் அன்புக்கு அம்மா, கண்டிப்பிற்கு அப்பா என்றெல்லாம் விட நல்ல வாழ்க்கை அமைய திருக்குறளை கற்றாலே போதும், ஆகவே தான், திருக்குறளின் தத்துவங்களை இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்வது நல்லது என்கின்றார் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஆகவே தினந்தோறும் திருக்குறள் ஒப்புவித்தால் அதற்காக இலவசமாக பெட்ரோல் வழங்குவதில் எங்களுக்கும் ஒரு மன நிம்மதி என்கின்றார் இந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications