கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு மகளிர் விடுதி ஜன்னலில் ஓட்டை! நம்ம பிள்ளைக படிச்சா இப்படி இருப்போமா? செல்வப்பெருந்தகை வார்னிங்

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசுக் கல்லூரி மகளிர் விடுதியில் ஆய்வு செய்த தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜன்னல்களில் ஒட்டை இருந்ததை கண்டு வார்டனை வறுத்தெடுத்துவிட்டார்.

நம்ம வீட்டு பிள்ளைகள் படித்தால், இப்படி இருப்போமா என வார்டனையும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரையும் கேள்விக்கணைகளால் துளைத் தெடுத்த அவர் ஜன்னல் ஒட்டைகளை சரி செய்யாவிட்டால் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என எச்சரித்தார்.

இந்த ஆய்வின் போது உடனிருந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. டென்ஷன் ஆனதை கண்டு அதிர்ந்து போய் நின்றார்.

4 மாநிலத்தில் ஆட்சி கவிழும்.. கையெடுத்து கும்பிட்ட கேசிஆர்.. ஸ்டாலினுக்கு போன 4 மாநிலத்தில் ஆட்சி கவிழும்.. கையெடுத்து கும்பிட்ட கேசிஆர்.. ஸ்டாலினுக்கு போன

பொதுக்கணக்கு குழு

பொதுக்கணக்கு குழு

தமிழக சட்டசபை பொதுக்கணக்குக் குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தச் சென்ற தமிழக சட்டசபை பொதுக்கணக்குக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தாந்தோன்றிமலை அரசுக் கல்லூரி மகளிர் விடுதியை பார்வையிட்டனர். அப்போது மகளிர் விடுதி அறைகளில் ஜன்னல் கண்ணாடி உடைந்து அட்டை வைத்து மறைக்கப்பட்டிருந்தது.

செல்வப்பெருந்தகை டென்ஷன்

செல்வப்பெருந்தகை டென்ஷன்

இதனைப் பார்த்ததும் ஏகத்துக்கும் டென்ஷன் ஆன செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., என்னாது இது எனக் கேட்டவாறு வார்டனை அழைத்தார். ''பெண் பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இது போன்று உள்ளது, நீங்க என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், நம்ம வீட்டு பிள்ளைகள் இருந்தால் இப்படித் தான் இருப்போமோ, சொல்லுங்க'' என லெப்ட் அண்ட் அரைட் வாங்கினார். நீங்கள் விடுதிக்கு வாரம் ஒரு தடை வர்றீங்களா, இல்லை மாசம் ஒரு தடை வர்றீங்களா என வினவினார்.

கடும் டோஸ்

கடும் டோஸ்

''அதற்கு தினமும் தான் சார் வருகிறேன்'' என அந்த விடுதி பெண் வார்டன் பதிலளிக்க, அப்புறம் ஏன் இப்படி எனக் கேட்டார். மேலும், மாவட்ட ஆதி திராவிடர் நல ஆணையரையும் அழைத்து டோஸ் கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடப்பதற்குள் ஜன்னல் கண்ணாடி சரிசெய்யப்பட வேண்டும், இல்லையென்றால் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என எச்சரித்துவிட்டுச் சென்றார் செல்வப்பெருந்தகை.

தவறை சுட்டிக்காட்டுவார்

தவறை சுட்டிக்காட்டுவார்

இந்த ஆய்வின் போது உடனிருந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. டென்ஷன் ஆனதை கண்டு அதிர்ந்து போய் நின்றார். செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை எந்த மாவட்டத்துக்கு ஆய்வுக்கு சென்றாலும் அதிரடியாக உள்ளூர் அமைச்சர்களுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் தவறுகளை சுட்டிக்காட்டக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu Assembly Public Accounts Committee Chairman Selvaperunthagai, who inspected Thanthonrimalai Government College Women's Hostel in Karur district, scolded the warden after finding that there was hole on the windows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X