ஆளும் கட்சி அதிமுகதான்.. மாநில சுயாட்சிக்கு எதிராக பேசுகிறாரா தம்பிதுரை?

Subscribe to Oneindia Tamil

கரூர்: இந்தியாவை ஆளும் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகதான் ஆளும் கட்சி, திமுக இல்லை என மாநில சுயாட்சிக்கு எதிரான ஒரு கருத்தை அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேசியுள்ளரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    ஆளும் கட்சி அதிமுகதான்.. மாநில சுயாட்சிக்கு எதிராக பேசுகிறாரா தம்பிதுரை?

    கரூரில் நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில
    போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தானேஷ் முத்துகுமார் ஆதரித்து வெள்ளியனை அருகே மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை பரப்புரை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர் கரூர் மக்களுக்காக நான் மீண்டும் மேலவையில் குரல் கொடுத்து வருகிறேன். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

    உள்ளாட்சி திட்டங்கள்

    உள்ளாட்சி திட்டங்கள்

    திமுக கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே உள்ளாட்சியில் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று வாக்கு கேட்கிறார்கள். ஆனால் இன்றைக்கு இந்தியாவை ஆளுகின்ற கட்சி பாஜக, மோடி தான் பிரதமராக உள்ளார். மோடி நினைத்தால் மட்டுமே எதும் நடக்கும் அதனுடன் கூட்டணி கட்சி இருப்பது அதிமுக.

    அதிமுகதான் ஆளும் கட்சி

    அதிமுகதான் ஆளும் கட்சி

    அதனால் ஆளும் கட்சி அதிமுகதான் திமுக இல்லை. தமிழக அமைச்சர் மத்திய அரசிடம் சென்று நிதி வழங்குங்கள் என்று அங்கு தான் கேட்கிறார்கள், அதனால் திமுக ஆளும் கட்சி இல்லை. இந்தியாவை ஆளும் கட்சியுடன் அதிமுக இருக்கிறது. மக்களின் குறைகளை அதிமுக தான் நிறைவேற்றும்.

    திமுக அதற்கு மேல்

    திமுக அதற்கு மேல்

    டெல்லிக்கு அதிமுக காவடி தூக்கிறார்கள் என்றார்கள். ஆனால் இப்போது அதற்கு மேல் தூக்கிறவர்கள் திமுக. உள்ளாட்சிக்கு டெல்லியில் இருந்தான் பணம் கொடுக்கிறார்கள். திமுகவுக்கு அதிகாரம் இல்லை. உண்மையான அதிகாரம் டெல்லியில் தான் இருக்கிறது. என்று தம்பிதுரை பேசியுள்ளார். தம்பிதுரை பேசியதை பார்த்தால் மாநில அரசு எந்தவித அதிகாரமும் இல்லாதது போல் பேசியுள்ளார்.

    கருணாநிதி

    கருணாநிதி

    பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் வரை மாநில சுயாட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என முழங்கியவர் கருணாநிதி. மாநில சுயாட்சியில் அதிகாரங்களை கொடுத்தால் மத்திய அரசால் அதை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. இதுதான் மாநில சுயாட்சியின் சிறப்புகளாகும். இப்படிப்பட்ட மாநில சுயாட்சிக்கு எதிராக தம்பிதுரை பேசுகிறாரோ என சந்தேகிக்க வைக்கிறது அவரது பிரச்சாரம். அதிமுகவின் இரட்டை தலைமை அவரை கண்டிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+