எடுக்க எடுக்க "புதையல்.." குளித்தலை அருகே சிவபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் காத்திருந்த ஆச்சரியம்
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் ஏடுகள் எடுக்க எடுக்க புதையல் போல் வந்துள்ளது.. ராஜகோபுரத்தில் என்ன வந்தது என்று பார்த்தால் சுமார் 29 ஆயிரம் சுருணை ஏடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஆச்சர்யமான உண்மைகளை அந்த சுருணை ஏடுகளில் அடங்கி இருக்கிறது. அதனை பற்றி இப்போது பார்ப்போம்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில் புகழ் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில்களுக்கு ஏராளமான சிவபக்தர்கள் வருவார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் இந்த சிவபுரீஸ்வரர் கோயில் மிகவும் புகழ் பெற்றது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் 29 ஆயிரம் சுருணை ஏடுகள் ராஜகோபுரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் தான் இதனை கண்டறிந்துள்ளனர். இதில் கோயில் தேவஸ்தானம் நீதிமன்றமாகச் செயல்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 46,020 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இருந்த ஓலைச்சுவடிகளை பாதுகாக்க 'திருக்கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கத் திட்ட' பணிக்காக 12 பேர் கொண்ட குழு இருக்கிறது. இக்குழுவினர் இதுவரை 282 கோயில்களில் கள ஆய்வு செய்து 29 செப்பு பட்டயங்கள், 1,80,280 சுருணை ஓலைகள், 351 இலக்கியச் சுவடிக் கட்டுகள், 2 வெள்ளி ஏடு, ஒரு தங்க ஏடு ஆகியவற்றை கண்டறிந்துள்ளார்கள்.
இந்நிலையில் தான் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலிலுக்கு திட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் ஆய்வாளர்கள் கோ.விஸ்வநாதன், நா.நீலகண்டன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, ராஜகோபுரத்தின் 2-வது தளத்தில் எடுக்க எடுக்க புதையல் போல் வந்து கொண்டே இருந்தது. சுமார் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுருணை ஏடுகளை கண்டறிந்தனர்.

இந்த சுருணை ஏடுகளை செய்தியாளர்களின் பார்வைக்கு வைத்த ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் பேசும் போது, சிவபுரீஸ்வரர் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓலைச்சுவடிகள் மிகவும் முக்கியமானவை. இதில் சிவாயம் கோயில் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் காணப்படுகின்றன. சுருணை ஏடு என்பது இலக்கிய ஏடுகளின் அளவில் இருந்து மாறுபட்டதாகும். இங்கு எடுக்கப்பட்டுள்ள ஏடுகள் சுமார் 100 செ.மீ. நீளம் வரை உள்ளன.
இந்த சுருணை ஏடுகளில் சொத்து விவரம், கோயில் வரவு- செலவு கணக்கு விவரம், அலுவல் குறிப்புகள், நில குத்தகை முறைகள், நில தானம், பூசை முறை, பண்டாரக் குறிப்புகள், அந்த கால நடைமுறைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோயிலில் இறைவனுக்கு திருப்பணி செய்யும் தேவதாசிகள் இருந்துள்ளனர். இவர்களுக்கு கோயிலுக்குச் சொந்தமான 3 காணி நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவதாசிகள் நடனம் ஆடும்போது மேளம் அடிக்க தனியாக மேளக்காரர்களும் இருந்தது தெரியவந்துள்ளது.அவர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அதோடு, தேவதாசிகளுக்கு கோயிலில் பரிவட்டம் கட்டும் வழக்கமும் இருந்துள்ளது.
கி.பி.1,846 காலகட்டங்களில் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில் கும்பினியார் (ஆங்கிலேயர்கள்) சர்க்காருக்குக் கீழ் இருந்தது தெரியவந்துள்ளது. கி.பி.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர்கோயில் சிவாயம் சிவபுரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்துள்ளது. அய்யர் மலைக்கோயிலை சிவாயம் மலைக்கோயில் என்றே அழைத்திருககிறார்கள்
அக்காலகட்டத்தில் சிவாயம் கோயில் தேவஸ்தானம், நீதிமன்றம்போல் செயல்பட்டிருக்கிறது. இங்கு ல்வேறு வழக்குகள் சர்க்கார் (அரசு) சார்பில் விசாரிக்கப்பட்டிருக்கிறது. சிவாயம் தேவஸ்தானத்தில் ஸ்தானிகராக இருந்த வீரபத்திரன் பிள்ளை என்பவர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அது தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றன.
அதுபோல், அப்புவய்யன் என்ற பணியாளர் குளித்தலை பெருமாள் கோயில், கடம்பர் கோயில், ஈஸ்வரன் கோயில் உள்பட பல கோயில்களில் பணி செய்துள்ளதை விசாரித்தும், அப்படி பணிபுரிந்திருந்தால் அவருக்கு 3 மாத சம்பளம் வழங்குவது குறித்து தீர்ப்பு வழங்கிய குறிப்பும் உள்ளன. இவ்வாறு பல குறிப்புகள் சுருணை ஏடுகளில் உள்ளன. சுருணை ஏடுகள் முழுவதையும் ஆய்வு செய்தால் சிவாயம் கோயில் சார்ந்த பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும்" இவ்வாறு கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications