கழுவி ஊற்றும் மக்கள்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! கரூர் செல்கிறாரா விஜய்?
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கரூருக்கு விஜய் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விஜய் தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தில் 100 அடி கொண்ட குறுகலான சாலையில் 60 அடி நீளம் கொண்ட விஜய்யின் பேருந்து வந்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட போது மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது ஒரு 9 வயது சிறுமி காணாமல் போனதாக தகவல் தெரிந்த நிலையில் விஜய்யும் அந்த குழந்தை காணாதது குறித்து அறிவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் சிதறியதால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் மயங்கி விழுந்தனர். கூட்டத்தில் இருந்த பலர் தண்ணீர் தண்ணீர் என கூக்குரல் இட்டனர். அப்போது விஜய்க்கு கேட்கவில்லை. மேலும் தங்கள் காலணியை எடுத்து வீசினர்.
பின்னர் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து விஜய் என் நடந்தது என கேட்டதற்கு, தண்ணீர் வேண்டும் என்றனர். உடனே தனது வாகனத்தில் இருந்த தண்ணீரை எடுத்து வீசினார். ஆனாலும் பலருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனினும் அவரது பேச்சை நிறுத்தாமல் அதே நேரத்தில் சுருக்கமாக பேசிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த தள்ளுமுள்ளுவில் 39 பேர் பலியாகிவிட்டனர். குழந்தைகள் 9 பேர், பெண்கள் 17 பேர் ஆண்கள் 13 பேர் என இறந்துவிட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்தடுத்த உயிரிழப்புகளால் கரூரே கதி கலங்கி போயிருக்கும் நிலையில் விஜய்யோ பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்காமல், அவசர அவசரமாக புறப்பட்டு சென்னை சென்றுவிட்டார். இந்த நிலையில் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த விஜய், கரூர் மக்களுடன் இருக்காமல் ஓடி ஒளிந்துவிட்டார் என கரூர் மக்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் வீட்டில் தற்போது மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கரூரில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆறுதல் என்ற விமர்சனம் உள்ள நிலையில் அவர் மீண்டும் கரூர் செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications