கரூர் சம்பவத்தை கடக்க துடிக்கும் விஜய்! குறுக்கே வந்த கவுசிக்! வேலுச்சாமிபுரத்தில் களமிறங்கிய சீமான்!
கரூர்: அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், சந்தித்து வரும் மிகப்பெரிய விமர்சனமே கரூர் துயரம்தான். இதனை மக்களிடத்திலிருந்து மறக்கடிக்க தமிழக வெற்றிக் கழகம் துடித்து வருகிறது. இப்படி இருக்கையில், கரூர் துயரம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.
கரூர் சம்பவத்தில் விஜய்யை சரமாரியாக விமர்சித்தவர்களில் நாம் தமிழர் கட்சியினரும் முக்கியமானவர்கள். இப்படி இருக்கையில், கட்சி சார்பில் திடீரென வேலுசாமிபுரத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, ஏதோ யதார்த்தமான மூவ் என்று சொல்லிவிட முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விஜய்தான் காரணம்
தவெக எப்படியும் தன்னுடன் கூட்டணிக்கு வந்துவிடும் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார் சீமான். எனவேதான் விஜய்யை தம்பி என ஆசையாக அழைந்து வந்திருந்தார். ஆனால், கூட்டணி கணக்கு பொய்த்துவிட்டது. இது நடந்த கொஞ்ச நாட்களிலேயே, கரூர் விவகாரத்திலும் விஜய் சிக்கினார். இதனையடுத்து விஜய்யை கடுமையாக தாக்கி பேசியிருந்தார் சீமான். கூட்ட நெரிசலுக்கும், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் முழு காரணமும் விஜய்தான் என்றும் விமர்சித்திருந்தார்.
மன்னிப்பு கேட்காத விஜய்
"விஜய் வந்ததால்தான் கூட்டம் வந்தது. விஜய்யை பார்க்க சேர்ந்த கூட்டம்தான் அது. எனவே நெரிசலுக்கு காரணம் அவர்தான்" என்று சாடியிருந்தார். மட்டுமல்லாது இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த பின்னரும் கூட விஜய் மன்னிப்பு தெரிவிக்காதது குறித்தும், கட்சி நிர்வாகிகள் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.
நாட்டை ஆளும் தகுதி
தவெக அனுமதி கோரிய இடத்தில்தான் காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது. அப்படி இருக்கையில் இந்த சம்பவத்திற்கு முழுமுதற் காரணமும் விஜய்தான் என்று ஒரேயடியாக பாய்ந்திருந்தார் சீமான். அத்துடன் நிற்காமல், ஒருவர் சினிமாவில் ஹீரோவாக நடித்துவிட்டால் மட்டுமே அவருக்கு நாட்டை ஆளும் முழு தகுதியும் வந்துவிடாது என்றும் விஜய்யை விமர்சித்திருந்தார்.
துடிக்கும் தவெக
கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. விசாரணைக்காக டெல்லிக்கு விஜய் போய் வந்தது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. சிபிஐ விசாரணை, கரூர் பலி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூரில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் சொன்னது இப்படி தன் மீதான விமர்சனங்களை எப்படியாவது மக்கள் மறந்தவிட வேண்டும், தேர்தலுக்குள் மக்கள் மத்தியில் வேறு விஷயம் பேசு பொருளாகிவிட வேண்டும் என விஜய் வேண்டிக்கொண்டிருக்கிறார்.
குறுக்கே வந்த கவுசிக்
ஆனால், குறுக்கே இந்த கவுசிக் வந்தால்.. என்கிற ரீதியில் சீமான் மீண்டும் கரூர் விஷயத்தை லைம்லைட்டுக்கு கொண்டுவர நினைத்திருக்கிறார். எனவேதான் கரூர் துயர சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், தமிழம் செந்தில்நாதன், சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி, கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கப்பட இருக்கிறது. எனவே, இது தமிழக வெற்றிக் கழகத்தினரை உசுப்பியிருக்கிறது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications