கிராம நிர்வாக அலுவலர் செய்த அசிங்கம்.. கரூரில் பட்டா மாறுதல் கேட்டால்.. விஏஓ செய்த காரியத்தை பாருங்க
கரூர்: அரசு துறையில் உள்ள அதிகாரிகளில் சிலர் லஞ்சம் வாங்குவது, அந்தந்த துறையின் மீதான நம்பகத்தன்மையை குலைத்து விடுகிறது.. மேலும் நேர்மையாக எத்தனையோ அரசு அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில், இதுபோன்ற ஒருசிலர் செய்யும் தவறுகளால், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் ஏற்பட்டுவிடுகிறது.. இதோ கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் நடந்த இரண்டு லஞ்ச சம்பவங்களும் அதிகாரிகள் மீது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது மேட்டு மகாதானபுரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் சதீஷ் என்பவர், மறைந்த தன்னுடைய அம்மா வீரம்மாளுக்கான வாரிசு சான்றிதழ் பெற சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

பலமுறை கேட்டும், மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் நேரடியாகவே அங்கு சென்ற சதீஷ், சான்றிதழ் வழங்காதது குறித்து காரணம் கேட்டுள்ளார்.
கரூர் விஏஓ பிரபு
அதற்கு விஏஓ பிரபு, ரூ.3000 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் கிடைக்கும் என்றாராம்.. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சதீஷ், லஞ்சம் வழங்க மறுத்து, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரை அணுகினார். போலீசார் வழிகாட்டியப்படி ரசாயனம் தடவிய 3000 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்று, அலுவலகத்தில் இருந்த பிரபுவிடம் வழங்கினார் சதீஷ்..
அப்போது மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், பிரபு லஞ்சம் பெறும் தருணத்தில் உடனே பாய்ந்து அவரை பிடித்து விசாரணைக்கு எடுத்து சென்றனர். சாதாரண மக்கள் நம்பிக்கையுடன் அணுகும் அலுவலர் ஒருவரே, இப்படி லஞ்சம் கேட்கிறாரே? என்று குளித்தலை பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஏஓ கருப்புசாமி
இந்த அதிர்ச்சி அடங்கும் முன்பே, இதற்கு இணையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வேந்தோணி கிராம விஏஓ கருப்புசாமியும் (58) லஞ்சம் பெற்றதாக சிக்கியுள்ளார்.
தன்னுடைய தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய விரும்பிய ஒருவர், கருப்புசாமியிடம் தொடர்பு கொண்டாராம்.. அதற்கு விஏஓ கருப்புசாமி, "எனது லாகினுக்கு விண்ணப்பம் வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேன்" என்று கூறி மனுதாரரின் போன் நம்பரையும் வாங்கி கொண்டாராம்.
அம்மா பெயரில் பட்டா
இந்த நேரத்தில் மனுதாரரின் செல்போன் நம்பருக்கு, பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்ததாக கருப்புசாமி அழைத்துள்ளார்.. பிறகு, "நான் சிபாரிசு செய்ததால் தான் உங்க அம்மா பெயரில் பட்டா கிடைத்தது. அதனால் எனக்கு 15000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று விஏஓ கருப்புசாமி கேட்டாராம்.
அதற்கு மனுதாரர், அவ்வளவு பணம் தன்னால் கொடுக்க முடியாது என சொன்னதற்கு, ரூ. 2 ஆயிரத்தை கழித்து , ரூ.13 ஆயிரம் தந்தால் போதும் என்று பேரம் பேசினாராம் விஏஓ கருப்புசாமி..
ஆனால், லஞ்சம் தரவிரும்பாத மனுதாரர் நேராக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸார் ரசாயனம் தடவிய 13 ஆயிரம் ரூபாயை மனுதாரரிடம் தந்து அனுப்பவும், அந்த பணத்தை கருப்புசாமி பெறும்போது சுற்றி நின்று அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்
கட்டுக்கடங்காத லஞ்சம்
பொதுமக்கள் தங்கள் உரிமையை பெறுவதற்குகூட லஞ்சம் தரவேண்டிய நிலைமை உள்ளதையே இந்த இரண்டு சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன..
அரசு அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து விண்ணப்பித்த நிலையில், அவர்கள் இப்படிச் செயல்படுவது சமூக வலைதளங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. லஞ்சத்தை கட்டுக்குள் கொண்டுவர, அரசு ஏதாவது உடனடியாக செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications