8 மணி நேரம்.. கரூரை கலங்கடித்த கருப்பு கார்.. சூட்கேஸை திறந்து பார்த்த போலீசுக்கு பெரிய ட்விஸ்ட்
கரூர் : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தேசிய நெடுசாலையில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நின்ற காரில் சீரியஸாக சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்டை பாருங்கள்.
பொதுவாக போலீசார் தினமும் வாகன சோதனை நடத்துவார்கள். அப்படி வாகன சோதனை நடத்தும் போது சில நேரங்களில் பழைய குற்றவாளிகள் சிக்குவார்கள். சில இடங்களில் வில்லங்கமான நிகழ்வுகள் நடப்பது உண்டு.

இதனிடையே ஆள் இல்லாமல் நீண்ட நேரம் நிறுத்தப்படும் கார்கள், பைக்குகள், அனாதையாக கிடக்கும் பைக்குகள் போன்றவை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சோதனை நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்து போலீஸ் படை அங்கு விரைந்து சென்றது. சுமார் எட்டு மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த காரை, சந்தேகத்துடன் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த போலீசார், ஒரு கட்டத்தில் நொந்து போனார்கள்.
ஏனெனில் சீரியஸாக சோதனை நடத்திய போலீசார், ஒரு கட்டத்தில் காரில் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரின் தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து ஏன் காரை நிறுத்திவிட்டு சென்றீர்கள் என்று கேட்டுள்ளார்கள்- அதற்கு அவர் கார் பழுதானதால் அங்கு நிறுத்திவிட்டு லிஃப்ட் கேட்டு வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார். மேலும் தனது காரில் துணிகள் மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் சீரியஸாக நடந்த சோதனை கடைசியில் காமெடியில் முடிந்தது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications