கரூர் கூட்டம்.. 1 வாரமாக பிளான் போட்ட விஜய், புஸ்ஸி! அவங்கதான் மாஸ்டர்மைண்ட்! மாரிதாஸ் திடுக்
சென்னை: ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகிய இருவரும் கரூரில் கூட்டம் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக, ஒருவாரத்திற்கும் மேலாக விதவதமாக ரசிகர்களிடம் குறிப்பிட்ட இடத்திற்கு வர கூறி நிர்வாகிகள் மூலமாக பிரச்சாரங்களை செய்துள்ளனர். அவர்கள்தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை வரவழைத்தனர் என்று அரசியல் விமர்சகர் மாரிதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக, காவல்துறை அதிகாரிகள் விஜய்யின் சென்னை இல்லத்திற்கே நேரடியாகச் சென்று கேள்விகளை எழுப்பலாமா என்பது குறித்து தற்போது தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இது தொடர்பான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் மாரிதாஸ் அட்டாக்
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், விஜய் கைது செய்யப்பட வேண்டுமா? விஜய் மேட்மட்ட குழுவில் இந்த பயணத்தை திட்டமிட்ட லாட்டரி ஆதவ் அர்ஜூனா , புஸ்ஸி ஆனந்த இந்த இருவரும் கூட்டம் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக ஒருவாரம் மேலாக விதவதமாக ரசிகர்களிடம் குறிப்பிட்ட இடத்திற்கு வர கூறி நிர்வாகிகள் மூலமாக பிரச்சாரங்களை செய்துள்ளனர். கூட்டம் போதாது என்றால் அருகே உள்ள மாவட்டத்திற்கும் சேர்ந்து பிரச்சாரம் செய்து கூட்டம் கூட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
முந்தய கூட்டத்திலும் இது போல் மயங்கி விழுந்து பல விபத்துகள் நடந்தும் கூட இவர்களுக்கு அந்த ரசிகர்களை வைத்து கூட்டம் காட்டும் கீழ்தரமான ஆசை மட்டுமே இருந்துள்ளது.

எனவே கைது செய்யப்ப்ட வேண்டியது அவசியம் அதில் லாட்டரி ஆதவ் அர்ஜூன, புஸ்ஸி ஆனந்த் முக்கிய குற்றவாளிகள். விஜய் சொல்லி செய்தார்களா என்பது விசாரிப்பது அடுத்த விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்! அசம்பாவித சம்பவம் நடந்தது தெரிந்து எஸ்கேப் ஆகிடலாம் என்று திருச்சி போய் அங்கே இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பிய விஜய் செயல் வெக்கக்கேடானது.
டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்
முன்னதாக டிஜிபி வெங்கட்ராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூரில் நடைபெற்றது மிகவும் துயரத்தக்கமான விஷயம். தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆண்கள் 12, 16 பெண்கள், ஐந்து ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என பத்து குழந்தைகள் இறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் மூன்று ஐஜி கல் இரண்டு டிஐஜிக்கல் 10 எஸ்பிக்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமா வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது கரூரில் பெரிய இடம் அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.
இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்பரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.
முக்கியமாக குறிப்பிட விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் விஜய் இரவு 7:40க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை., என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications