கல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்!
15 வயது சிறுமியை சீரழித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
கரூர்: "உன்னைதான் கல்யாணம் செய்வேன்" என்ற ஆசை வார்த்தையை சொல்லி சொல்லியே பலமுறை பள்ளி மாணவியுடன் உறவு கொண்டு, கர்ப்பமாக்கிய இளைஞனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட கீழத்தலையூர் மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இவரது மனைவி விஜயா வயது 45. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளுக்கு வயது 15. பக்கத்தில் உள்ள எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயாவுக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது. வயசு 25 ஆகிறது.
சொந்தக்காரர் என்பதால் லோகநாதன் பள்ளி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். விஷயம் தெரிந்து விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கொதித்து போனார்கள்.
இது சம்பந்தமாக அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் லோகநாதனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications