அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்
Recommended Video
கரூர்: "அனிதாவின் உடம்புல காயங்கள் இருக்கு.. தற்கொலைன்னு பொய் சொல்றாங்க.. என் பொண்ணை கொன்னுட்டாங்க" என்று இளம் பெண்ணின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி உறவினர்கள், பொதுமக்கள் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி மறியலில் ஈடுபட முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், காட்டுமுன்னூர் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர், ஆதிரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
இவரது மகன் ஜீவானந்தம், 29 வயதாகிறது. தென்னிலையில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் உதவி பேராசிரியாக உள்ளார். கடந்த ஆண்டு நெரூர் பகுதியை சேர்ந்த அனிதா என்பவருடன் ஜீவானந்தத்துக்கு திருமணம் நடந்தது.

தற்கொலை
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதை கேட்டு பதறியடித்து கொண்டு வந்த அனிதாவின் பெற்றோர், மகளின் உடலை கண்டு கதறி அழுதனர்.

வாய்ப்பு இல்லை
பின்னர், க.பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு உறவினர்களுடன் சென்ற அவர்கள், "மகளின் உடம்பில் காயங்கள் இருக்கு. தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. இது சம்பந்தமாக உரிய விசாரணை எடுத்து, மகளின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்" என்று புகார் அளித்தனர்.

விசாரணை
கல்யாணம் ஆகி ஒரு வருடத்திலேயே பெண் இறந்துள்ளதால், இந்த வழக்கு பற்றி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது இரு தரப்பிலும் விசாரணைக்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

நொறுக்கினர்
அதன்படி ஜீவானந்தம், அவரது அம்மா லட்சுமி விசாரணைக்காக அங்கு காரில் வந்தனர். அவர்களை பார்த்ததும் ஆத்திரமடைந்த அனிதாவின் பெற்றோர், உறவினர்கள், அவர்கள் அமர்ந்திருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

மறியல்
"என் மகளை கொன்றது இவங்க ரெண்டு பேரும்தான்.. வரதரட்சணைக்காக கொன்றுவிட்டார்கள்.. இப்போது தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள்" என்று ஆவேசமாக கூறினர். பிறகு ஒட்டுமொத்த அனிதாவின் குடும்பமும் மறியலிலும் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் பேசினர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜீவானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications