கர்நாடகா சட்டசபை தேர்தல்: கோலாரில் சித்தராமையா போட்டி? இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு?
கோலார்: கர்நாடகா சட்டசபை தேர்தல் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கோலார் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஜேடிஎஸ் கட்சி தமது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவையும் படுமுனைப்புடன் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இம்முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும்; ஆனால் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகவும் பாஜக 2-வது கட்சியாகவும் இருக்கும் எனவும் அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவெடுக்குமாம். இதனால் மீண்டும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அமையும் என்கின்றன அக்கணிப்புகள்.

இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கோலார் சட்டசபை தொகுதிக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். கோலார் சட்டசபை தொகுதியானது தலித்துகள், குருபர்கள், முஸ்லிம்களை உள்ளடக்கியது. பாஜக இத்தொகுதியில் பலவீனமானது.
கோலார் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் சீனிவாச கவுடா எம்.எல்.ஏ.வாக இருந்தார். ராஜ்யசபா தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்ததால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இம்முறை சித்தராமையாவை ஆதரிக்கிறார் என்கின்றன தகவல்கள். ஆகையால் கோலார் தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக சித்தராமையா இன்று அறிவிக்கக் கூடும் என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ்












Click it and Unblock the Notifications