கோமதி ஆண்ட்டியின் அட்ராசிட்டி... ஏரிக்கரையில் பழனிசாமியுடன்.. மிரண்டு போன தியாகதுருவம்..!
கிருஷ்ணகிரி அருகே இளைஞரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்
கிருஷ்ணகிரி: ஏரிக்கரை பக்கம் ராத்திரி நேரம் இளைஞரை அழைத்து சென்றுள்ளார்.. பிரியாணி சாப்பிட்டுள்ளார்.. ஜாலியாக இருந்துள்ளார்.. கடைசியில் அந்த இளைஞரை கொலை செய்துவிட்டு கிளம்பிவிட்டார் விபச்சாரம் செய்யும் கோமதி!
கிருஷ்ணகிரி மாவட்டம், மணடிப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி.. இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூர் என்ற கிராமத்தில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தியாகதுருவத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் பழனிசாமி பிணமாக கிடந்தார்.. அவரது கழுத்தை யாரோ நெரித்து கொன்றது தெரியவந்தது.. ஆனால் யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.
இதையடுத்து தியாகதுருவம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.. உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் ஸ்வீட் கடையில் விசாரித்தபோது, பழனிசாமிக்கு பல விபச்சார அழகிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.. அதில் கோமதியின் பெயர் பிரதானமாக அடிபட்டது.. கோமதிக்கு 45 வயதாகிறது.. இவருக்கும் பழனிசாமிக்கும் நீண்ட காலமாகவே கள்ள உறவு இருந்திருக்கிறது. கோமதி விபச்சாரம் செய்து வருபவராம்.. சம்பவத்தன்று 2 பேரும் ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர்.
போகும்போதே ஓட்டலில் பிரியாணி பொட்டலத்தை வாங்கி கொண்டு போயுள்ளனர்.. ஏரிக்கரையில் இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.. அப்போதுதான் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார் கோமதி.. அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து வைக்கவும், அதை குடித்து பழனிசாமி குடித்துவிட்டார்.. ஆனால் அவருக்கு மயக்கமே வரவில்லை.
மயங்கி விழுந்து இறந்துவிடுவார் என்று பொறுத்து பொறுத்து கோமதி, கடைசியில், தன்னுடைய சேலையால் பழனிசாமியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.. இறுதியில் அவரிடமிருந்த 3,500 ரூபாய் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார் என்பதும் கோமதியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்யப்பட்டார்.
அப்போது போலீசாரிடம் கோமதி அளித்த வாக்குமூலத்தில், "நான் விபசார தொழில் செய்து வருகிறேன்... என்னுடன் வரும் ஆண்களுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து தருவேன்.. அவர்கள் கொஞ்சம் தூங்கியதும், பணம், செல்போனை திருடிச்சென்று விடுவேன்... பழனிசாமிக்கும் அப்படித்தான் செய்தேன்.. அவர் மயங்கி விழாததால், என் சேலையால் கழுத்தை நெரித்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications