ஓசூர் ஏர்போர்ட் பிளானுக்கு பெரிய அடி.. ஆந்திராவிடம் விமான சோதனை மையத்தை இழந்தது தமிழ்நாடு
கிருஷ்ணகிரி: இந்தியாவின் மிக முக்கியமான ஒரு ராணுவத் திட்டத்தை (Advanced Medium Combat Aircraft - AMCA) தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் கொண்டு வர தமிழக அரசு கடந்த 3 வருடங்களாக பே முயற்சி செய்தது. ஆனால், மத்திய அரசு அந்த மெகா பிராஜெக்ட்டை ஆந்திர மாநிலத்திற்குத் தூக்கிக் கொடுத்துவிட்டது. இத்தனைக்கும் இத்திட்டத்திற்காக தமிழ்நாடு 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. பெங்களூரு விமாநாபுராவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு பக்கத்திலேயே இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக ஆந்திராவிற்கு வழங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் (ராடாரில் சிக்காத) போர் விமானங்களைச் சோதனை செய்யும் மற்றும் தயாரிக்கும் மெகா மையம் தமிழ்நாட்டின் ஓசூரில் அமைவதாக இருந்தது. இதன் மதிப்பு ₹15,000 கோடியாகும். ஓசூரில் புதிதாக அமையவிருக்கும் விமான நிலையத்தோடு சேர்த்து, இந்த ராணுவ மையத்தையும் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு , டிஆர்டிஓ உடன் (மத்திய அரசுடன்) தீவிரமாகப் பேசி வந்தது. ஒரு பக்கம் பயணிகள் விமானம், மறுபக்கம் இந்த ராணுவ விமானச் சோதனை மையம் என ஓசூரை உலகத் தரத்தில் மாற்றத் திட்டமும் மத்திய அரசிடம் இருந்துள்ளதாம்.

ஆந்திரா தட்டிச் சென்றது எப்படி
தமிழ்நாடு, ஆந்திரா என இரண்டு மாநிலங்களுக்கும் இடையே இந்த திட்டத்தை பெறுவதில் பிராந்தியப் போட்டி இருந்தது. ஆனால் மத்திய அரசு ஆந்திராவிற்கு ஆதரவு தந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டனர்.
ஓசூர் தான் சரியான இடம்
தொழில்நுட்ப ரீதியாகவும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் ஆந்திராவை விட தமிழ்நாடுதான் (ஓசூர்) மிகச் சிறந்த வசதிகளை ஆஃபர் செய்திருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓடுதளம் (Runway) 3.5 கி.மீ நீளத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆந்திராவில் உள்ள ஓடுதளம் வெறும் 2.1 கி.மீ தான். ஆந்திரா இப்போதுதான் நிலத்தைக் கையகப்படுத்தி அதை 3 கி.மீ ஆக நீட்ட வேண்டும். இவ்வளவு சாதகங்கள் இருந்தும், DRDO ஏன் தமிழ்நாட்டை விடுத்து ஆந்திராவைத் தேர்ந்தெடுத்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இன்னும் சொல்லவில்லை.
உள்கட்டமைப்பில் தமிழ்நாடு பெஸ்ட்டாக இருந்தும், அரசியல் அல்லது பிராந்தியக் காரணங்களால் ₹15,000 கோடி மதிப்புள்ள மெகா ராணுவத் திட்டம் ஓசூரில் இருந்து ஆந்திராவின் புட்டபர்த்திக்குக் கைமாறிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அபோர்ட் டெஸ்ட்' என்றால் என்ன
இத்தனைக்கும் இருப்பினும், விமானத்தை அவசரமாக நிறுத்தும் சோதனைகளை (Abort tests) மேற்கொள்வதற்கு, ஆந்திராவின் மாற்றியமைக்கப்பட்ட ஓடுதள நீளம் இன்னும் பற்றாக்குறையாகவே இருக்கலாம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் இந்த 'அபோர்ட் டெஸ்ட்' என்பது, அவசர காலங்களில் ஒரு விமானம் பாதுகாப்பாக நிறுத்த முடியுமா அல்லது மீள முடியுமா என்பதைச் சரிபார்க்க, டேக்-ஆஃப் அல்லது பணியை திட்டமிட்டு ரத்து செய்யும் ஒரு முக்கியமான விமானப் பாதுகாப்பு நடைமுறையாகும்.
பெங்களூர் அருகே உள்ள இடம்
ஓசூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்தியாவின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் தலைமையகம் அமைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பாட்டிருந்தால், இந்த அருகாமை, தற்போதுள்ள வான்வெளி உள்கட்டமைப்புடன் சிறந்த ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியிருக்கும் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்
இவ்வளவு சாதகமான விதிமுறைகளை வழங்கிய போதிலும், புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டிற்கு அருகில் நிலம் அடையாளம் காணப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இத்திட்டத்தைத் தொடருமாறு DRDO-விற்குப் பின்னர் உத்தரவிடப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, இந்த இடத்தை மாற்றியதற்கான எந்தக் காரணத்தையும் DRDO அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு விளக்கம் அளித்தால் தான், ஏன் ஆந்திராவிற்கு போனது என்பது தெரியவரும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications