நான் அமைச்சராகாமல் தடுத்து என்னை ஒழிக்க நினைத்த பொம்பளை சசிகலா - கே.பி. முனுசாமி ஆவேசம்
சசிகலாவை ஏன் எதிர்க்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? அன்று என்னை எதிர்த்த பொம்பள அவ தான் . நான் அமைச்சராக கூடாது என அம்மாவிடம் சண்டை போட்டு என்னை ஒழிக்க நினைத்தவர் என்று கேபி முனுசாமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்
கிருஷ்ணகிரி: என்னை எதிர்த்தவர் சசிகலா. நான் அமைச்சராகாமல் தடுத்து என்னை ஒழிக்க நினைத்த பொம்பளை அவதான் அதானால்தான் நான் இப்போது சசிகலாவை எதிர்க்கிறேன் என்று கே.பி முனுசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.பி.முனுசாமிக்கும் சசிகலாவுக்குமான பகை பல ஆண்டுகளாக தொடர்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு சசிகலாவை சாணி என்று பேசி பரபரப்பை ஏற்படுத்திய கே. பி. முனுசாமி இன்று மீண்டும் சசிகலாவிற்கு எதிராக பேசியுள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆளும்கட்சி வேட்பாளர்களும் எதிர்கட்சி வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து
திமுக வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார். இரு தினங்களுக்கு முன்பு முருகன் பிரசாரம் செய்த போது, கே.பி.முனுசாமியால் 30 சதவிகித வாக்குகளை கூட வாங்கி கொடுக்க முடியாததால்தான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார் என்று தெரிவித்தார்.

நீங்க தாங்க மாட்டீங்க
திமுக வேட்பாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கே.பி. முனுசாமி பேசியுள்ளது தாறுமாறு தக்காளி சோறு ரகமாக உள்ளது. முருகனுக்கு பதிலடி கொடுத்த முனுசாமி நான் பேச ஆரம்பித்தால் நீங்கள் தாங்கமாட்டிங்க. நான் நேரா மேடைக்கே வந்துடுவேன்; அது மாதிரியான ஆளு நான். நீ படிச்ச புள்ள, சட்டமன்ற உறுப்பினர். தப்பா பேசாதே என்று கூறினார்.

கையேந்தியதில்லை
சசிகலாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசியுள்ளார். என் 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் கேட்டு கையேந்தியது இல்லை என்று கூறியுள்ள முனுசாமி, நானொரு போராளி என்றார்.

சசிகலா ஜெயித்தார்
சசிகலாவை எதற்கு எதிர்க்கிறேன் என தெரியுமா? அன்றைக்கு என்னை எதிர்த்து வந்த பொம்பள, நான் அமைச்சராக இருக்ககூடாது என அம்மாவிடம் சண்டை போட்டவ. எனக்கும் சசிகலாவுக்கும் கடும் போட்டி இருந்தது. அந்த போட்டியில் அவ ஜெயிச்சா, நான் தோற்றேன் என்று கூறியுள்ளார்.

சீட்டு கொடுத்த அம்மா
அம்மா என் பக்கம் இருந்தார். என் மீது பாசமாக இருந்தார். அவர் என்னை விடவில்லை தேர்தலில் போட்டியிட எனக்கு சீட்டு கொடுத்தார். 2016 ல் அம்மா எனக்கு வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட சீட்டு கொடுத்தார். ஆனால் நான் வெற்றி பெற்று விடுவேன் என்று நினைத்த சசிகலா என்னை பென்னாகரம் தொகுதிக்கு மாற்றியதாக கூறியுள்ளார்.

அரசியல் பரபரப்பு
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியுள்ள நிலையில் அவரை ஒருமையில் கேபி முனுசாமி பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.பி.முனுசாமிக்கும் சசிகலாவுக்குமான பகை பல ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கட்சியிலிருந்து நீக்கிய ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்தும் அனுப்பினார். அந்த சமயம் கே.பி.முனுசாமி, சாணிகள் எல்லாம் தங்களை பிள்ளையார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அம்மா பிடித்து வைத்தால்தான் பிள்ளையார். இல்லையென்றால் அவர்கள் சாணிதான் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா முன்பு பேசினார் கே.பி முனுசாமி.

சசிகலா vs கே. பி. முனுசாமி
ஜெயலலிதா மனம் மாறி சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட பின்னர் கே.பி.முனுசாமி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன் பின்னர் சில ஆண்டுகள் ஒதுங்கியே இருந்தார் கே.பி முனுசாமி. சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது கடுமையாக சசிகலாவை எதிர்த்து பேசினார். இப்போது மீண்டும் சசிகலாவிற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
சென்னை மண்டலத்தை கைப்பற்றிய திமுக! கொங்குவில் அதிமுக கிங்! 2021-ல் மாவட்ட வாரியாக யார் ஸ்ட்ராங்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications