பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை பேச்சு!
கிருஷ்ணகிரி: பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, "ஏழை மக்களுக்காக ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 31 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. 9 ஆண்டு கால மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களிடையே அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

திமுக அரசு இந்தி திணிப்பு என அரசியல் செய்து வருகிறது. ஆனால் மோடி இந்தியா முழுவதும் தமிழ் படிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழை உலக அளவில் கொண்டு செல்கிறார். பிரதமர் மோடி தாய்மார்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். தற்போதைய நிலவரத்தை பார்த்தால் காங்கிரஸ் கட்சியினரே மோடிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என்பது போல தெரிகிறது.
பொய் பேசும் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். அவர் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக கூறி வருகிறார். ஆனால், 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை, பதநீர் மூலம் பனைவெல்லம் தயாரிப்பை ஊக்கப்படுத்தி, வேளாண் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்தல் உட்பட இந்த மாவட்ட மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளார். மது குடிப்பதை தடுக்க முடியாது. தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், பனை, தென்னையில் 168 மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என பாஜக சார்பில் அறிக்கையை முதல்வர், ஆளுநரிடம் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழக அரசு டாஸ்மாக் நடத்துவது அரசுக்கு வருவாய் கிடைப்பதற்காக இல்லை. திமுகவினரின் நடத்தும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான். பொங்கல் தொகுப்பாக ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது திமுக காலண்டரையும் கொடுத்து விளம்பரம் தேடி வருகின்றனர்" என விமர்சித்தார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications