Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறந்த 'மெசேஜ்'.. கிளம்பி வந்த நட்டா.. கப்சிப் மோடில் கட்சி.. ஆர்வம் காட்டாத ர.ரா.க்கள்.. மேட்டர் என்ன

தமிழ்நாட்டில் பாஜக அலுவலகங்களை திறந்த வைக்க நட்டா இன்று கிருஷ்ணகிரி வருகிறார்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு வருகை தருகிறார். இந்நிலையில் அதிமுக பிரச்னை குறித்து ஏதும் பேசப்படுமா? என கேள்விகள் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் பேசியதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்ததிலிருந்து தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க வேண்டுமென தீவிர முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு என இளம் செயற்பாட்டாளர்களை தலைவர்களாக நியமித்து வந்தது. அந்த வகையில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் வரிசையில் அண்ணாமலையும் தலைவராக செயலாற்றி வருகிறார். ஆனால் தற்போது சில முக்கிய புள்ளிகள் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருக்கின்றனர்.

இவ்வாறு இணைந்தவர்கள் அனைவருமே அண்ணாமலை மீதுதான் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர். சமீபத்தில் பாஜக ஐடிவிங் தலைவராக இருந்த சி.டி.நிர்மல்குமார், அவரைத் தொடர்ந்து திலீப் கண்ணன் உட்பட சில முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்திருக்கின்றனர். இந்த விவகாரம் இரு கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் பாஜகவினர் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பாஜக

பாஜக

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எப்பாடி பழனிசாமியின் உருவாப்படமும் எரிக்கப்பட்டது. அதேபோல எடப்பாடி ஒரு துரோகி என்றும், எங்கள் முதலமைச்சர் அண்ணாமலை என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் 50 பேர் அண்ணாலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இந்த பஞ்சாயத்து இப்படியே நீடித்துக்கொண்டிருந்த நிலையில், "ஒரு கட்டத்தில் திராவிட கட்சிகளிலிருந்து ஆட்களை கொண்டுவந்துதான் பாஜக கட்சி நடத்தியதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜகவை நம்பிதான் திராவிட கட்சிகள் இருக்கிறது" என்று அண்ணாமலை ட்வீட் செய்தார்.

 அதிமுக

அதிமுக

இப்பிரச்னை குறித்து கருத்து கூறிய அதிமுக மூத்த தலைவர் செம்மலை, "அதிமுக-பாஜக சேர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது உண்மைதான். ஆனால், அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலை தனித்தனியாகதான் எதிர்க்கொண்டோம். எனவே கூட்டணி தொடர்கிறது என்று அர்த்தமில்லை என்று கூறியிருந்தார். ஆனால் மறுபுறம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி தொடரும்" என்று கூறியிருந்தார். இதில் எடப்பாடி பழனி ஒருபடி மேலே சென்று பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

 மோதல் போக்கு

மோதல் போக்கு

எனவே பாஜக-அதிமுக மோதல் போக்கு நீடிக்கிறதா? அல்லது முடிந்துவிட்டதா? என்று உறுதியாக சொல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இப்படி இருக்கும் சூழலில்தான் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வருகை முடிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். மொத்தம் 10 மாவட்ட அலுவலகங்களை இன்று அவர் திறந்து வைக்கிறார். இதில் கிருஷ்ணகிரி தவிர மீதமுள்ள 9 மாவட்ட அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வின்போது அதிமுகvsபாஜக பஞ்சாயத்து தொடர்பாக ஏதேனும் பேசப்படுமா? என்று கேள்வியெழுந்தது.

 பிரத்யேக தகவல்

பிரத்யேக தகவல்

இது குறித்து நம்முடைய ஒன் இந்தியா தமிழ் சார்பில், அதிமுக நிர்வாகிகளிடம் சிலரிடம் பேசினோம்.. நட்டா வருகையால் என்ன நடக்க போகிறது? அதிமுக விவகாரம் குறித்து பேசப்படுகிறதா? என்ற கேள்விகளை நாம் முன்வைத்தோம்.. அதற்கு அவர்கள் நம்மிடம் சொல்லும்போது, "நட்டா, பாஜகவின் கட்சி அலுவலகத்தை திறக்கவே வருகிறார். அதிமுக விவகாரம் குறித்து எதுவும் பேச வாய்ப்பில்லை... நாங்களும் இது குறித்து எதுவும் பேச திட்டமிடவில்லை" என்று திட்டவட்டமாக கூறினார்கள்.. அதற்கேற்றவாறு, பாஜக மாநில துணைதலைவர் கே.பி.ராமலிங்கமும் இன்று காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதே தகவலை உறுதி செய்தார். எங்களுடைய தேசிய தலைவர் பேசும் அளவுக்கு தமிழ்நாட்டில் எந்த புதுமையும் ஏற்பட்டுவிடவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்துதான் பேசுவாரே தவிர வேறு எதையும் பேசுவதற்கு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் இன்று இருக்கும் ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே இலக்கு" என்று கூறியுள்ளார்

 வாய்ப்பில்ல ராஜா

வாய்ப்பில்ல ராஜா

"இன்று மீடியாக்களில் வரும் சில விஷயங்கள் மிகவும் சாதாரணமானவை. இவற்றை எங்களுடைய கடைநிலை பேச்சாளர்களே சமாளித்துக்கொள்வார்கள். எங்களுடைய தேசிய தலைவர் பேசும் அளவுக்கு தமிழ்நாட்டில் எந்த புதுமையும் ஏற்பட்டுவிடவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்துதான் பேசுவாரே தவிர வேறு எதையும் பேசுவதற்கு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் இன்று இருக்கும் ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே இலக்கு" என்று கூறியுள்ளார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

அதுமட்டுமல்ல, நேற்றைய தினமே இந்த அதிமுக - பாஜக விவகாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களே, குறிப்பாக கொங்கு மண்டலத்தின் அதிமுக - பாஜக சீனியர்களே ஒன்றாக கூடிபேசி, நடந்து வந்த சலசலப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.. இரு கட்சிகளின் கூட்டணியும் தொடரும் என்று நேற்றைய தினமே இரு தரப்பினரும் அறிவித்துவிட்டதால், இதில் மேலிடம் தலையிட வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

 ஸ்பீடு பணிகள்

ஸ்பீடு பணிகள்

நட்டாவை பொறுத்தவரை, கடந்த மாதமும் அவர் தமிழகம் வந்திருந்தார். கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பான ஆலோசனை நடத்திவிட்டு போயிருந்தார். காரணம், பாஜக பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு, ஜேபி நட்டா நேரடியாகவே செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் செல்வார்கள் என்றும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. அந்தவகையில்தான், கடந்த மாதம் தமிழகம் வந்திருந்த நட்டா, பாஜக தவைர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தார்.. அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய நட்டாவின் வருகையும் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+