மேல்மருவத்தூர் பக்தர்கள் பேருந்தில் நடனம்! திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! வீடியோவை பாருங்க!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் பேருந்தில் பக்தர்கள் ஆடி பாடிக் கொண்டு சென்ற காட்சியும் விபத்து ஏற்பட்டபோது அவர்கள் நிலைகுலைந்து அலறிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண் பக்தர்கள் மாலை அணிந்து புனித பயணம் மேற்கொள்வது போல பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். சபரிமலை போலவே அந்த கோவிலுக்கும் இருமுடி கட்டி பெண்கள் செல்வது வழக்கம்.

பொதுவாக டிசம்பர் முதல் ஜனவரி வரை மேல்மருவத்தூர் சீசன் தொடங்கும். குறிப்பாக அங்கு நடைபெறும் தைப்பூச விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மற்ற கோவில்களில் பெண்கள் செல்லக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் இந்த கோவிலில் பெண்களை கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்:
இதன் காரணமாகவே இந்த கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால் தென்னக ரயில்வே தனியாக சிறப்பு ரயில்களை கூட அவ்வப்போது ஏற்பாடு செய்வது உண்டு. இந்த நிலையில் தற்போது மேல்மருவத்தூர் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் ரயில்கள் மூலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பக்தர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து விபத்து:
அப்படி பக்தர்கள் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளான பதைபதைக் வைக்கும் காட்சிகள் தான் தற்போது வெளியாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாராபட்டி அருகே எட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் சுமார் மூன்று பேருந்துகளில் சென்னை நோக்கி சென்றனர். ஊத்தங்கரை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் உட்பட 47 பேர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை:
தகவல் அறிந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சிலர் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துக்குள் நடனம்:
இந்த நிலையில் ஊத்தங்கரை பேருந்து விபத்தில் சிக்கியவர்கள் பேருந்துக்குள் சாமி பாடலுக்கு நடனம் ஆடிய படி சென்றதும் திடீரென விபத்தில் சிக்கி அவர்கள் அலறிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் செவ்வாடை அணிந்த பெண்கள் சிறுமிகள் உள்ளிட்டோர் கையில் வேப்பிலையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
சில நொடிகளில் எல்லாமே மாறிப் போனது 😔😔😔
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) December 28, 2024
பொறுப்பே இல்லாம வண்டி ஓட்டுறானுக. pic.twitter.com/tTjanhjj9R
அதிர்ச்சி வீடியோ:
பேருந்தில் உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென பேருந்து பள்ளத்தில் கவிழ்கிறது. அப்போது அலறிய அவர்கள் காயங்களுடன் இருப்பது போல் அந்த வீடியோ இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் அவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஆட்சியர் ஆறுதல்:
இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டார் இதேபோல ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications