கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி
Recommended Video
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி.
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

சுயேச்சை
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சையான கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

210 வாக்குகள்
அவர் 21 வயதான மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட 210 வாக்குகளை அதிகமாக பெற்றார்.

கனவு
இதுகுறித்து அவர் கூறுகையில், 21 வயது பெண் என்றும் பாராமல் என்னை நம்பி 4 கிராம மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை விட எனது தொகுதியை முன்மாதிரியாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே எனது கனவாக இருந்தது.

நிச்சயம்
அதை நோக்கி பயணம் செய்தேன். இன்று வெற்றி கிடைத்தது. எனது தொகுதியை கல்வியில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட பெரியவர்கள், ஜாம்பவான்களை விடுத்து எனக்கு வாக்களித்த மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications