எங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்
கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்
Recommended Video
கிருஷ்ணகிரி: "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை.. ஆனா நிம்மதியும் இல்லை.. அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டோம்" என்று ஜெரினா கைப்பட எழுதிய கடிதத்தை கண்டு பொதுமக்கள் கலங்கி விட்டனர்.
கிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் ஒரு லாரி டிரைவர். ஜெரினா என்பவருடன் கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகிறது. ஆனால் இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இப்போதுதான் ஜெரினா 3 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்க போனவர்கள் நேற்று காலை வரை எழுந்திருக்கவே இல்லை. இதனால் சந்தேகப்பட்ட அக்கம் பக்கம் வீட்டினர், ஜெரினா வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது, குமரனும், ஜெரினாவும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ந்தனர். உடனே இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று, உடல்களை மீட்டு விசாரணையில் இறங்கியது. அப்போதுதான் ஜெரினா எழுதிய அந்த கடிதம் போலீசார் கண்ணில் சிக்கியது.

அந்த கடிதத்தில், "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. ஆனால் நிறைய கடன் வாங்கிவிட்டோம், எங்களால், அந்த கடனை திருப்பி தர முடியவில்லை. நிம்மதியாக வாழவும் முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சொந்தக்காரர்கள் யாராவது, எங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று, கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. 3 மாத கர்ப்பிணி பெண்ணுடன் லாரி டிரைவரும் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications