தேன்கனிக்கோட்டை தோப்பில் தெரிந்த "மனித கால்".. யாரது? கிருஷ்ணகிரி தாசில்தாரும் கிளம்பி வந்துட்டாரு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தென்னந்தோப்புக்கு, அந்த பெண் எப்படி வந்தார்? இதன் பின்னணியில் யார்? என்பது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.. இதனால், கெலமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்திலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பசவேஸ்வர சுவாமி கோவில் மானிய நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்தவர் பயன்படுத்தி வருகிறார்.

தென்னந்தோப்பு: இங்குள்ள தென்னந்தோப்பை தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.. அப்போது, திடீரென கால் பகுதி ஒன்று தெரிந்துள்ளது.. அழுகிய நிலையில் காணப்பட்ட, பெண்ணின் கால் பகுதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த பெண்ணின் உடல் பகுதி, மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது.. உடல் மீது, மண் கொட்டப்பட்டிருந்தது.
இந்த தகவலறிந்து கெலமங்கலம் போலீசார், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணா்களும் நிகழ்விடத்துக்கு வந்து ஆய்வு செய்கிறார்கள்.. போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் அந்த சடலம் மீட்கப்பட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு, கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சடலம் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது.
2 காயங்கள்: அந்த பெண் உயிரிழந்து, எப்படியும் ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.. அவரது உடலின், 2 இடங்களில் காயங்கள் இருக்கிறதாம்.. அதனால், பெண்ணை கொலை செய்து சடலத்தின் மீது மர்மநபர்கள் மண் கொட்டி விட்டு சென்றுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.. இறந்த பெண்ணுக்கு 35 முதல் 40 வயதிருக்கலாம் என்கிறார்கள்.. அவா் அணிந்திருந்த உடைகளும் கலைந்திருந்ததாக கூறுகிறார்கள்..
ஆனால், கொலையான பெண் யார் என்ற விபரம் தெரியவில்லை. அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்களா? என்றும் தெரியவில்லை.. தேன்கனிக்கோட்டை சாலையில் பழைய ராஜலட்சுமி தியேட்டர் பின்புறம், இந்த கோயில் நிலம் உள்ளது.. அறநிலையத்துக்குச் சொந்தமான இந்த கோயில் மானிய நிலத்தில், தென்னந்தோப்பும் உள்ளது. இந்த தோப்பு பகுதிக்கு பெண்ணை யாராவது கடத்தி வந்தார்களா? என்றும் தெரியவில்லை. எதுவானாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும்..
விசாரணை: இதனிடையே, அந்த பெண் யார் என்று கெலமங்கலம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்த லிஸ்ட்டையும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications