தேன்கனிக்கோட்டையின் "முரட்டு காதல்".. ஒரே ஒரு முத்தத்தால் சிறை சென்ற கிருஷ்ணகிரி நபர்.. இப்ப பாருங்க
கிருஷ்ணகிரி: ஒரே ஒரு முத்தம் தந்து, போக்சோவில் ஜெயிலுக்கு சென்றுவிட்டார் இளைஞர்.. இதற்கு பிறகு நடந்த விபரீதம்தான் கிருஷ்ணகிரியை கதிகலங்க வைத்துவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ளது ஜெ.காருப்பள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் முனிராஜ்.. 47 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கெலமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

வெங்கடராஜ்: இதே கிராமத்தை சேர்ந்த வெங்கடராஜ் என்பவருக்கு 25 வயதாகிறது.. முனிராஜின் 17 வயது மகளை, காதலிப்பதாக சொல்லி, அந்த பெண்ணின் பின்னாடியே சுற்றி சுற்றி வந்துள்ளார் வெங்கடராஜ்.. அடிக்கடி லவ் டார்ச்சரும் தந்து வந்திருக்கிறார்..
இப்படித்தான், கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாணவி, ஸ்கூலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வெங்கடராஜ் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.. தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அத்துடன், நடுரோட்டிலேயே முத்தம் தந்துள்ளார்.
கைது நடவடிக்கை: இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசில் புகார் தந்தார்கள்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வெங்கடராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெங்கடராஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.. மறுபடியும், அதே மாணவியிடம் சென்று காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்ல, தன்னை அந்தப்பெண் கல்யாணம் செய்துகொண்டால் போக்சோ கேஸ் முடிந்துவிடும் என்றும் கணக்கு போட்டார் வெங்கடராஜ். இப்போது மாணவி பிளஸ்2 முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்.
உபேந்திரன்: நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு, தன்னுடைய நண்பர் உபேந்திரனை அழைத்துக் கொண்டு, முனிராஜின் வீட்டுக்கு சென்றார் வெங்கடராஜ்.. நள்ளிரவு 2 மணி என்பதால் அனைவருமே நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.. முனிராஜை எழுப்பிய வெங்கடராஜ், "உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தந்துவிடுங்கள், அப்போதுதான் என்னால் கேஸை வாபஸ் பெற முடியும்" என்று சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த முனிராஜ், திருமணத்துக்கு சம்மதம் தர முடியாது என்றார்.
ஆனால், ஆத்திரம் அடைந்த வெங்கடராஜ், மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.. உடனே முனிராஜ் தடுக்கவே, இரும்பு ராடு மற்றும் கட்டையால் அவரை தலையிலேயே ஓங்கி அடித்தார் வெங்கடராஜ்.. இதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.. எனினும் எதையும் பொருட்படுத்தாமல், அந்த மாணவியை வெங்கடராஜ் கடத்திச்சென்று விட்டார்...
தலைமறைவு: இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடிவந்தனர்.. இதில், நண்பர் உபேந்திரன் மட்டு கைதாகி உள்ளார். ஆனால், தலைமறைவான வெங்கட்ராஜ் எங்கே என்று தெரியவில்லை.. மாணவியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.. இவர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications