நோட் பண்ணிக்குங்க.. இன்னும் 10 வருஷத்துக்குதான் ஸ்டாலின் முதல்வர்.. அதுக்கப்புறம்.. துரைமுருகன் நச்
முக ஸ்டாலினை புகழ்ந்து தள்ளி பேசினார் துரைமுருகன்
கிருஷ்ணகிரி: எழுதி வெச்சுக்குங்க.. இன்னும் 10 வருஷங்களுக்கு பிறகு ஸ்டாலின்தான் பிரதமர் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. இதற்கு நடுவில் சுடச்சுட கருத்து கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் திமுகவுக்கு ஆதரவாகவே பல கணிப்புகள் வருகின்றன.
எனினும், கடைசி கட்டத்தில் எந்தவிதமான அசால்ட்தன்மையும் வந்துவிடகூடாது என்று திமுக தரப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியே வருகிறது.

துரைமுருகன்
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து, வேலம்பட்டியில் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற கோஷத்தை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியா, பல்வேறு இனம், மொழி, கலாசாரம், கடவுள் வழிபாடு கொண்ட நாடு. உண்டு.

முதல்வர்
இவற்றை அழிக்க ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அந்த சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். மத்திய அரசை எதிர்க்க, ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் பெற்றவர் ஸ்டாலின். கருணாநிதியைப்போல மத்திய அரசை எதிர்த்தவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிர்க்கும் இரும்பு இதயம் கொண்டவர் ஸ்டாலின் என்பதால் அப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்தில் அமர்ந்தால்தான் கலாச்சார படையெடுப்பை தடுக்க முடியும்.

தமிழன்
எந்த கட்சியில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் தமிழன்தான். எனவே தமிழை காக்கின்ற கட்சிக்கு நீங்கள் வாக்களியுங்கள். தமிழையும், தமிழனையும் காப்பாற்ற ஸ்டாலினை விட்டால் வேறு யாரும் இல்லை. அதனால்தான் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

பிரதமர்
திமுக ஆட்சியில், 10 வருஷத்துக்கு முன்பு வழங்கிய, டிவி இன்னைக்கும் ஓடுது.. ஆனால், இந்த ஆட்சியில் வழங்கிய ஃபேன், மிக்சி, கிரைண்டர் எதுவுமே இப்போ ஓடல.. தரமற்ற அரசு என்பதற்கு இது ஒரு உதாரணம். எழுதி வெச்சுக்குங்க.. ஸ்டாலின், இந்த 10 வருஷத்துக்கு மட்டும் முதல்வராக இருப்பார். அதுக்கு பிறகு, பிரதமராகி விடுவார்... அந்த அளவுக்கு, அவரிடம், நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications