புவனேஸ்வரியின் மாஸ்டர் பிளான்.. கிருஷ்ணகிரி நிலத்தில் விழுந்த 'கரியநிற' காதலன்.. பரிதாப கார்த்திக்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.. காதல் விவகாரம், கொலையில் போய்முடிந்துள்ளது.. புவனேஸ்வரி என்ற பெண்ணால், அப்பாவி இளைஞரின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. இப்போது கொலையாளிகள் 2 பேருமே கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.. கிருஷ்ணகிரி போலீசார இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடையை அடுத்துள்ளது பெரியதக்கேப்பள்ளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் கார்த்திக்.. இவருக்கு 30 வயதாகிறது.. மனைவி பெயர் பிரியா.. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

கால்நடை விவசாயி
கார்த்திக் கால்நடை விவசாயி ஆவார்.. தன்னுடைய விவசாய நிலத்திலேயே சில ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்... கடந்த 2ம் தேதி இரவு, விவசாய நிலத்திற்கு சென்ற கார்த்திக், அங்கு போடப்பட்டிருந்த கொட்டகையில் தூங்க சென்றிருக்கிறார்.. மறுநாள் காலையில் விவசாயிகள் அந்த பக்கமாக சென்றபோது, சடலமாக கிடக்கும் கார்த்திக்கை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. கார்த்திக் உடல் முழுவதும் எரிந்து கிடந்தது..
இதையடுத்து, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, அவர்களும் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்தனர்.. கார்த்திக் உடம்பில் யாரோ தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது.. இதனால் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.. அத்துடன், அந்த பகுதி செல்போன் டவர் லோகேஷனும் ஆராயப்பட்டு, சம்பவ நேரத்தில் யார் யாருடன் போனில் பேசினார்கள் என்ற ஆய்வும் நடத்தப்பட்டது.
புவனேஸ்வரி பிளான்
அப்போதுதான், புவனேஸ்வரி என்பவர், கடந்த 2ம் தேதி இரவு தினேஷ்குமார் என்பவருக்கு அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது.. பழையூரை சேர்ந்த புவனேஸ்வரிக்கு 22 வயதாகிறது.. தனியார் மருந்தக பணியாளராக பணியாற்றி வரும் தினேஷ்குமாருக்கு 25 வயதாகிறது.. இவர்கள் 2 பேருமே சம்பவத்தன்று அடிக்கடி போனில் பேசியதுடன், கொலை நடந்த இடத்திற்கு அருகே இவர்கள் வந்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தினேஷ்குமாரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போது போலீசாருக்கு தினேஷ்குமார் தந்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:
"நானும் புவனேஸ்வரியும் ஒரு வருடமாகவே காதலித்து வருகிறோம். ஆனால், எனக்கு முன் புவனேஸ்வரி கார்த்திக்கை காதலித்து வந்துள்ளார்.. அதற்குபிறகுதான் என்னை காதலிக்க துவங்கினார்.. என்னிடம் பழக ஆரம்பித்ததுமே கார்த்திக்குடன் உறவை துண்டித்து கொண்டார்.. ஆனாலும் கார்த்திக் புவனேஸ்வரிக்கு போன் செய்தபடியே இருப்பார். ஓயாமல் போனில் டார்ச்சர் செய்யவும், அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.
இரும்பு ராடு - ஏரிக்கரை
இதற்காக புவனேஸ்வரியிடம் கார்த்திக்கை தனியாக ஒரு இடத்திற்கு வரச்சொன்னேன்.. அதன்படி, கடந்த 2ம் தேதி இரவு விவசாய நிலத்திற்கு வந்தபோது, அவரை இரும்பு ராடால் அடித்து கொன்றேன்..
ஆதாரங்களை மறைக்க கொட்டகையில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீதே ஊற்றி தீ வைத்துவிட்டேன்-. பிறகு கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராடை, பழையூர் ஏரிக்கரையில் வீசிவிட்டு, கிருஷ்ணகிரி டூ வீலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு, பெங்களூருவுக்கு பஸ்ஸில் ஏறி தப்பித்துவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து, தினேஷ்குமாரும், காதலி புவனேஸ்வரியையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications