கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டுல சுசிலா.. நடுரோட்டிலேயே படுத்துட்டாரு.. பரபரத்த போச்சம்பள்ளி.. அடக்கடவுளே
கிருஷ்ணகிரி: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. கிருஷ்ணகிரியையே பரபரப்புக்கு உள்ளாக்கிவிட்டார் சுசிலா. யார் இவர்?
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய போச்சம்பள்ளியில் நகைக்கடை நடத்தி வருபவர் கங்காதரன். இவரது நகைக்கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருட்டு முயற்சி நடந்தது.

நகைக்கடைகள்: இந்த நகைக்கடையின் சுவரில் துளையிட்டு, மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இதையடுத்து, போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இறுதியில், போச்சம்பள்ளி சந்தையில் சந்தேகம் அடையும் வகையில் சுற்றித்திரிந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகன் (27) அவரது தம்பி வினோத் (24), தர்மபுரியை சேர்ந்த கண்ணன் (34) ஆகியோர் என்பதும். நகைக்கடையின் சுவரில் துளை போட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றது இவர்கள்தான் என்பதும் உறுதியானது... இதையடுத்து 3 பேரையுமே போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த 3 பேருமே இப்போது சிறையில் உள்ளார்கள்.
கெட்ட வார்த்தை: இந்நிலையில், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் திடீரென ஒரு பெண் வந்து நடுரோட்டில் நின்றார்.. ஆவேசமாக ரோட்டில் வந்து நின்றவர், கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டார்... இதனால், பஸ்கள், உட்பட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.. பிறகு, திடீரென ரோட்டிலேயே படுத்துக்கொண்டார்.. நீண்ட நேரம் நடுரோட்டில் படுத்து கொண்டதால், வாகன ஓட்டிகளால், அவரை மீறி செல்ல முடியவில்லை.
எனினும் ஒரு சில வாகனங்கள், அந்த பெண்ணை தாண்டி செல்ல முயன்றது. ஆனாலும் அந்த பெண் விடவில்லை.. அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.. இதனால் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டன. அதற்குள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் பறந்தது. விரைந்து வந்த அவர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றார்கள்.. என்ன நடந்தது? என்றும் கேட்டார்கள்.
மகன்கள்: தன்னுடைய பெயர் சுசிலா என்றார்.. கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருட்டு கேஸில் கைதாகி சிறையிலிருக்கும் ஜெகநாதன், விக்னேஷ் இருவருமே இவரது மகன்களாம்..கண்ணன் என்பவர் மருமகனாம்.
மகன்கள், மருமகன் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியது போலீஸ்காரர்கள்தான் என்று சத்தம் போட துவங்கினார்.. சுசிலா அப்போது மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது.
பரபரப்பு: இதையடுத்து, போலீசார் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று சொல்லி, சுசீலாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.. கிருஷ்ணகிரி ரோட்டில் சுசிலா செய்த அட்டகாசம்தான், வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications