கிருஷ்ணகிரி மாமியார், மருமகன் வயசை பாருங்க.. அந்த பெண்ணை குண்டுகட்டாக தூக்கி.. தடதட தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் என பல்வேறு பகுதிகளில் குழந்தை திருமணங்கள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.. இதுகுறித்த விழிப்புணர்வுகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும், குழந்தை திருமணங்கள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன.
தமிழகத்தில் பெண் சிசு கொலைகள் அதிகரிப்பதற்கு காரணமே, குழந்தை திருமணங்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.. பெண் குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்வதால், கருவுற்ற குழந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் இறந்தே பிறக்க நேரிடுகின்றன அல்லது குறைபாடுகளுடன் பிறக்கும் நிலைமை வந்துவிடுகிறது.

உடல் நல கோளாறுகள்
எனவேதான், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 3 வருடங்களுக்கு முன்பு, விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி போன்ற மாவட்டங்கள் பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, அங்கு இதுகுறித்த தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமல்லாமல், சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை என பிற மாவட்டங்களிலும் குழந்தை திருமணங்கள் நடைபெற துவங்கிவிட்டன.
பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால், அவர்களது சமூக வாழ்க்கை சீரழிந்து, அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் மோசமடைகின்றன.. சில நாட்களுக்கு முன்பு, 8ம் வகுப்பு மாணவி திருமணம் முடிந்து, மறுநாளே மஞ்சள் தாலியுடன் கிளாஸ் ரூமுக்குள் நுழைந்துள்ளார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்களே, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் தந்தார்கள்.
கிருஷ்ணகிரி பெண் குழந்தைகள்
இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்களே பிரதான காரணமாக இருப்பதால், அவர்களை, போலீசார் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து வருகிறார்கள்.
இதோ கிருஷ்ணகிரியில் ஒரு கொடுமை நேற்று நடந்துள்ளது.. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. வெறும் 14 வயதுதான் ஆகிறது.. 7ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுமிக்கும், காளிக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் என்ற 30 வயது நபருக்கும் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் திருமணம் நடந்துள்ளது..
அடம் பிடித்து அழுத சிறுமி
இந்த திருமணத்தை சிறுமியின் அம்மா நாகம்மா நடத்தி வைத்துள்ளார்.. கல்யாணம் முடிந்து, நேற்றுதான் ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள்.. ஆனால், அந்த சிறுமி, இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று அழுது கொண்டே இருந்தாராம்.. கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றும் பிடிவாதம் பிடித்து, மற்றொரு கிராமத்திலிருந்த தன்னுடைய பாட்டி வீட்டிற்கு ஓடிவிட்டாராம்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் (38) இருவரும், பாட்டி வீட்டுக்குள் நுழைந்து, அழுதுகொண்டிருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளார்கள்.
தேன்கனிக்கோட்டை
வீடு புகுந்து சிறுமியை மாப்பிள்ளையும், அவரது அண்ணனும் தூக்கி செல்வதை, பாட்டியின் கிராமத்திலிருந்தவர்கள், செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோவை பார்த்தபிறகுதான் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசாரும், அதிகாரிகளும் அதிர்ந்துபோய், சிறுமியின் பாட்டியிடம் சென்று புகார் பெற்றுள்ளனர்.. இப்போது அந்த புகாரின்பேரில், சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ், சிறுமியின் அம்மா நாகம்மா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்..
இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், மாப்பிள்ளைக்கு 30 வயது, அவருடைய மாமியார் அதாவது நாகம்மாவுக்கு 29 வயது..!!












Click it and Unblock the Notifications