ரூ.40,000 வரை சம்பளம்.. கிருஷ்ணகிரி சுகாதாரத்துறையில் 37 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 37 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

மருத்துவ அலுவலர்: என்ஆர்எச்எம் மற்றும் என்ஏஎம் திட்டம் ஆகியவற்றின் கீழ் ஆயுஷ் மருத்துவ அலுவலர் பணிக்கு தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் பிஎஸ்எம்எஸ்/பிஎச்எம்ஸ் படிப்பை முடித்து முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். என்ஆர்எச்எம் திட்டத்தில் பணியமர்த்தப்படுவோருக்கு மாதம் ரூ.34 ஆயிரமும், என்ஏஎம் திட்டத்தில் பணியமர்த்தப்படுவோருக்கு மாதம் ரூ.40 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்.
மருந்தாளுனர்: சித்தா மருந்தாளுநர் (Pharmacist) பணிக்கு ஒருவர், மருந்து வழங்குபவர் (Dispenser) பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் டிப்ளமோ பார்மஸி படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் சித்தா மருந்தாளுநர் பணிக்க மாதம் ரூ.22,500 சம்பளமாக வழங்கப்படும். மருந்து வழங்குபவர் பணிக்கு தினமும் ரூ.750 சம்பளமாக கிடைக்கும்.
சிகிச்சை உதவியாளர்: சிகிச்சை உதவியாளர் எனும் (Therapeutic Assistant) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக நுட்புநர்: ஆய்வக நுட்புநர் (நிலை 2) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிஎம்எல்டி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாதசம்பளமாக ரூ.13,000 வழங்கப்படும். அதேபோல் பல்நோக்கு மருத்துவமைன பணியாளர் வேலைக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தினமும் ரூ.300 சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: ஆயுஷ் மருத்துவ உதவியாளர், சித்தா மருந்தாளுநர், மருந்து வழங்குபவர் சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டு்ம. பிசி எம்பிசி என்றால் 34 வயது வரையும், எஸ்சி எஸ்டி என்றால் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆய்வக நுட்புநர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு 59 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: மேற்கூறிய இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 11 மாதம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை https://krishnagiri.nic.in எனும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகல்களோடு நேரில் அல்லது ஸ்பீட் போஸ்ட் முறையில் பிப்ரவரி 21ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி மாவட்டம் 635 115 என்ற முகவரிக் அனுப்பி வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்தவர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications